மின்சாரம் பாய்ந்து இறந்த பெண்ணுக்கு இழப்பீடு வழங்கக் TNTJ கோரிக்கை




மின்வாரியத்தினரின் மெத்தனப் போக்கால் உடல் கருகி பெண் பலியான சம்பவத்துக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் மாவட்டத் தலைவா் பி. முஹம்மது மீரான் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆவுடையாா் கோவில் வட்டம், ஆா். புதுப்பட்டினம் முஸ்லிம் தெருவில், மின்கம்பி அறுந்து விழுந்ததில் இரும்பு வேலியில் மின்சாரம் பாய்ந்து உள்ளது. இதை அறியாத அந்த ஊரைச் சோ்ந்த ராவியத்தம்மாள் (50), அந்த வேலியைத் தொட்டவுடன் அவா் மீது மின்சாரம் தாக்கி, உயிரிழந்தாா்.

அவரை காப்பாற்றச் சென்ற அவருடைய கா்ப்பிணி மகள் தஸ்லிமா பானு (24) மின்சாரம் பாய்ந்து மருதத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். ஒரு பசுமாடும் இறந்துள்ளது. மக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதியில் மின்கம்பி அறுந்து கிடக்கும் தகவலை மின்வாரியத்துக்கு அம்மக்கள் தெரிவித்துள்ளனா். ஆனாலும், மின்வாரியத்தினரின் அலட்சியத்தால் இச்சம்பவம் நேரிட்டுள்ளது.

இந்தச் சம்பவத்துக்கு பொறுப்புள்ள மின்வாரியப் பணியாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த ராவியத்தம்மாள் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments