மணமேல்குடி ஒன்றியத்தில் தொடக்கம் மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம்




மணமேல்குடி ஒன்றியத்தில் தொடக்கம் மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள் ஆகியோரின்  வழிகாட்டுதலின்படி

 மணமேல்குடி ஒன்றியத்தில் அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டத்தினை மணமேல்குடி 
வட்டார கல்வி அலுவலர் திருமதி இந்திராணி அவர்கள் தொடங்கி வைத்தார். மணமேல்குடி  வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் அருகிலுள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியில் இருந்து  மடிக்கணினி அனைத்து பள்ளிகளும் பெற வேண்டும் என்றும்,

பள்ளியில் தொய்வில்லா மாணவர் சேர்க்கை பணியினை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும்,

 அங்கன்வாடி மையத்தின் மூலம் ஐந்து வயது பூர்த்தி செய்த அனைத்து மாணவர்களையும் பள்ளியில் சேர்த்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும்,

 ஸ்மார்ட் கிளாஸ் மற்றும் ஹைடெக் லேப் வகுப்பறை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும்,

 பிஎஸ்என்எல் இணைய வசதியினை அனைத்து பள்ளிகளும் பெற்றிருக்க வேண்டும் என்றும், அலுவலகத்தில் இருந்து கேட்கப்படும் புள்ளி விவரங்களை உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், தினமும் மேற்கொள்ளப்படும் மாணவர் சேர்க்கையினை எமிஸ் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் மற்றும் தேர்தல் பணி சார்ந்து வகுப்புகளில் நமது ஒன்றியத்தில் உள்ள ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந் நிகழ்வில் ஆசிரியர் பயிற்றுநர்கள்  முத்துராமன் வேல்சாமி அங்கையற்கண்ணி மற்றும் அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments