புதுக்கோட்டை வழியாக இராமேஸ்வரம் - மால்டா டவுன் (மேற்கு வங்காளம்) இடையே திருநெல்வேலி - ஜோத்பூர் (இராஜஸ்தான்) இடையே 2 புதிய வாராந்திர ரயில்கள் இயக்க பரிந்துரை




திருநெல்வேலி  - ஜோத்பூர் இடையே புதுக்கோட்டை , திருச்சி, விருத்தாச்சலம், சென்னை வழியாக ஒரு புதிய வாராந்திர ரயிலும்

ஜோத்பூர் - ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது.
ராமேஸ்வரம் - மால்டா டவுன் இடையே  புதுக்கோட்டை , திருச்சி விருத்தாச்சலம், சென்னை வழியாக ஒரு புதிய வாராந்திர ரயிலும் இயக்க தென்னக ரெயில்வே நிர்வாகம் முன்மொழிவு செய்துள்ளது. 

மால்டா டவுன் - மேற்குவங்க மாநிலத்தில் உள்ளது.

இந்த 2 புதிய வாராந்திர ரயில்களும் புதுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு இருமார்கங்களிலும் சாதகமான நேரத்தில் வரும் என்பதால் அயோத்தி, பனாரஸ் வண்டிகளை போல் அல்லாமல் புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் 2 வண்டிகளும் நின்று செல்லும் வகையில் தென்னக ரெயில்வே நிருவாகம் அட்டவணை வெளியிடும் என்று நம்புவோம்.

குறிப்பு: எற்கனவே ஹூப்ளி - ராமேஸ்வரம் வாராந்திர ரயிலும், அகமதாபாத் - ராமேஸ்வரம் வாராந்திர ரயிலும் புதுக்கோட்டை வழியாக இயக்க இரயில்வே வாரியத்திற்கு முன்மொழியப்பட்டுள்ளது!

News Credit : Pudukottai Rail Users

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments