நான்கு ஆண்டு விழா கண்ட ஏம்பக்கோட்டை மதரஸா ரஹுமா பரக்கத் மகளிர் அரபிக்கல்லூரி துவக்கம் முதல் தற்போது வரை சுருக்க வரலாறு.




புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் தாலுக்கா மீமிசல் அருகே உள்ள  ஏம்பக்கோட்டை  கிராமத்தில், அதே ஊரைச்சேர்ந்த ஹாஜி N.S . அயூப்கான் அவர்களால் மதரஸா ரஹுமா பரக்கத் என்ற பெயரில்  மதரஸா கட்டிடம் நிறுவப்பட்டு  கடந்த 2019 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ம் தேதி திறப்பு விழா நடைபெற்றது

தொடக்கத்தில் சிறுவர் சிறுமியர் ஓதும் மக்தப் மதரஸாவாக துவங்கி படிப்படியாக மகளிர் அரபிக்கல்லூரியாக வளர்ச்சி பெற்றது அதன்படி , சிறுவர் சிறுமியர் படிக்கும் மக்தப் வகுப்புகள் மார்க்கத்தின் அடிப்படையை தெரிந்துகொள்ளும் முஅல்லமா வகுப்புகள் மார்க்கத்தின் உயர் படிப்பான முபல்லிகா (ஆலிமா) வகுப்புகள் குர்ஆனை தஜ்வீதுடன் ஓதும் காரிஆ வகுப்புகள்

குர்ஆனை மனப்பாடம் செய்யும் ஹாபிழா சகிரா  போன்ற வகுப்புகள் நடைபெறுவதுடன், திருமண தம்பதிகளுக்கு மாதம் ஒரு முறை  நிக்காஹ் கவுன்ஸ்லிங்கும் நடைபெறுகிறது

இதுவரை  சனது பெற்றவர்கள் முஅல்லமா வகுப்பில் 58 பெண்களும் முபல்லிகா வகுப்பில் 9 பெண்களும் காரிஆ வகுப்பில் 7 பெண்களும் ஹாபிழா சகீரா ( குட்டி ஹாபிழா) வகுப்பில் 9 பெண்களும் சனது பெற்றுள்ளனர்


இதுவரை நான்கு ஆண்டு விழா கண்ட  இம்மதரஸாவில் வருடத்திற்கு  ஏறக்குறைய 160 மாணவ மாணவிகள் வரை ஓதுகின்றனர்....

அனைத்து மாணவ மாணவிகளுக்கும்  ரஹுமா பரக்கத் அறக் கட்டளை சார்பாக  பாடப்புத்தகங்கள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.....


ஹாஜி..N.S. அயூப்கான் அவர்களின் சிறப்பான
நிர்வாகத்தின் கீழ்,

மௌலவி ,பாஜில், காரி, அல்ஹாஜ் J.முகமது மைதீன் தாவூதி அவர்களின்  தலைமை ஆசிரியர் பொருப்பின் கீழ்நான்கு ஆசிரியர்களின் சிறப்பான பணியில் மதரஸா சிறப்பாக நடைபெற்று வருகிறது......

இம்மதரஸாவை முன்மாதிரியாக கொண்டு  கடற்கறை பகுதியில் நான்கு கிராமங்களில் புதிதாக பெண்கள் மதரஸா தொடங்கப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்

இம்மதரஸா ஹாஸடல் வசதி பெற்ற மகளிர் அரபிக்கல்லூரியாக 
உயர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்....

வல்ல ரஹ்மான்  இம்மதரஸாவை கியாமத் நாள் வரை சிறப்பாக நடைபெற உதவி செய்வானாக... ஆமின்....

அதேபோல் மதரஸாவை நிர்வகித்து வரும்  ரஹுமா பரக்கத் அறக்கட்டளை குடும்பத்தார்களுக்கும் இம்மையிலும் மறுமையிலும் உயர்ந்த பாக்கியங்களை வழங்கிடுவானாக..... ஆமின்.    யாரப்பல் ஆலமீன்...

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments