நாடாளுமன்ற தேர்தல்: வாக்குப்பதிவு விவரங்களை அறிந்துகொள்ள செயலி அறிமுகம் இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு



நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. இதில் முதல்கட்டமாக தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் கடந்த 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. எத்தனை சதவீதம் வாக்குகள் பதிவானது என்ற புள்ளி விவரம் மாநிலங்கள் வாரியாக தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில் வாக்குப்பதிவு விவரங்களை செல்போன் மூலம் வாக்காளர்கள் அறிந்துகொள்வதற்கு வசதியாக 'VOTER TURNOUT' என்ற செல்போன் செயலியை (ஆப்) இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கி உள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்தால் இந்தி, ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளில் வாக்குப்பதிவு தரவுகளை அறிந்துகொள்ளலாம். நாடாளுமன்ற தொகுதிகள் வாரியாகவும், சட்டமன்ற தொகுதிகள் வாரியாகவும் வாக்கு சதவீதம் பட்டியலிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த வாக்கு சதவீதம் உத்தேசமானது என்ற குறிப்பும் இடம் பெற்றுள்ளது.





எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments