2023-2024-ம் நிதியாண்டில் புதுக்கோட்டை ரெயில் நிலைய மொத்த வருவாய் ரூ.6.92 கோடி




புதுக்கோட்டை ரெயில் நிலையம் வழியாக திருச்சி, சென்னை, காரைக்குடி, ராமேசுவரம் உள்பட வட மாநிலங்களுக்கு ரெயில்கள் இயக்கப்படுகிறது. புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில்களை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2023-2024-ம் நிதியாண்டில் புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் மொத்த வருவாய் ரூ.6 கோடியே 92 லட்சம் ஆகும். இதில் பயணிகள் மூலம் ரூ.4 கோடியே 90 லட்சத்து 17 ஆயிரத்து 619 வருவாய் கிடைத்துள்ளது. சரக்கு ரெயில் மூலம் ரூ.1 கோடியே 1 லட்சம் வரை வந்துள்ளது. கடந்த 2022-2023-ம் நிதியாண்டில் பயணிகள் மூலம் கிடைத்த வருவாய் ரூ.4 கோடியே 48 லட்சத்து 90 ஆயிரத்து 1 ஆகும். இதனை ஒப்பிடும் போது பயணிகள் மூலம் வருவாய் தற்போது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த நிதியாண்டில்(2023-24) மதுரை கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில்
 புதுக்கோட்டை ரயில் நிலையம் பயணிகள் வருவாய் அடிப்படையில் 20 வது இடம் பிடித்துள்ளது.

மேலும் கடந்த  நிதியாண்டில் புதுக்கோட்டை ரயில் நிலையத்தை பயன்படுத்தி பயணிகள் எண்ணிக்கை - 06 லட்சத்து 12 ஆயிரத்து 349 ஆகும்

ஒரு நாள் பயணிகள் பயன்பாடு - 1673 

புதுகை ரயில் நிலையத்தில் ஒரு நாள் வருவாய் - ₹1,33,928/-

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments