கோபாலப்பட்டிணத்தில் TNTJ சார்பில் நோன்பு பெருநாள் தொழுகை !


இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான புனித ரமலான் கடந்த மாதம் 12 -ஆம் தேதி துவங்கியதை தொடர்ந்து இஸ்லாமியர்கள் புனித ரமலான் நோன்பு நேற்றுடன் நிறைவடைந்தது. ஷவ்வால் பிறை முதல் நாளான இன்று 10/04/2023 புதன்கிழமை நோன்பு பெருநாள் தினமாக கொண்டாடப்பட்டது.

அரண்மனை தோப்பு

TNTJ கோபாலப்பட்டிணம் கிளை சார்பாக அரண்மனை தோப்பில் காலை 7.00 மணிக்கு நபி வழியில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. தொழுகையை தொடர்ந்து சகோதரர் அப்துல் பாரி அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார்.

இதில் அதிகமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு நபிவழியில் தொழுகையினை நிறைவேற்றினார்கள்

கோபாலப்பட்டிணம் மக்கள் ஈகை திருநாளான பெருநாள் தொழுகையினை நிறைவேற்றிய பின் தமது வாழ்த்துக்களை தமது உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் தெரிவித்து மகிழ்ச்சி பொங்க ஈகை திருநாளை கொண்டாடி புகைப்படங்கள் எடுத்துகொண்டனர்.

இதில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமியர்கள் என திரளாக கலந்து கொண்டு புத்தாடை அணிவித்து இறைவனை வழிபட்டு ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்து வருகின்றனர். அதனை தொடர்ந்து ஒருவருக்கொருவர் தங்களது அன்பையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர். 

தொழுகைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஜமாஅத் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments