அறந்தாங்கி கல்வி மாவட்ட அளவில் 12-ஆம் வகுப்பு தேர்வில் 578 மதிப்பெண்கள் பெற்று கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த மாணவன் முதலிடம்!



அறந்தாங்கி கல்வி மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம், மணமேல்குடி ஒன்றிய அளவில் 12-ஆம் வகுப்பு தேர்வில் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த முகமது இப்ராஹீம் என்ற மாணவன் முதலிடத்தை பிடித்தார்.

கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி தமிழ்நாட்டில் 2023-2024ம் கல்வியாண்டிற்கான பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்றன.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த மரக்கடை தாஜிதீன் பேரனும், SRM. சேகு பரிது பேரனும் மரக்கடை சாதிக் பாட்சா அவர்களின் மகனுமாகிய முகமது இப்ராஹீம் என்ற மாணவன் 578/600 எடுத்து அறந்தாங்கி கல்வி மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம், மணமேல்குடி ஒன்றிய அளவில் முதலிடத்தையும், இயற்பியல் படத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்து அறந்தாங்கி கல்வி மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ளார். இவர் மென்மேலும் கல்வியில் சிறந்து விளங்கிடவும், பல சாதனைகளை படைத்திட GPM மீடியா குழு சார்பாக மனதார வாழ்த்துகிறோம்.


இந்த தேர்வில் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 66 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில் 100% சதவிகிதம் தேர்ச்சி பெற்று ஆவுடையார்கோவில் ஒன்றியம், மணமேல்குடி ஒன்றிய அளவில் முதலிடத்தையும், அறந்தாங்கி கல்வி மாவட்ட அளவில் BIO MATHS  பாடப்பிரிவில் முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளது. இப்பள்ளி மென்மேலும் கல்வி பணியில் சிறந்து விளங்கிடவும், பல சாதனைகளை படைத்திட GPM மீடியா குழு சார்பாக மனதார வாழ்த்துகிறோம்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments