மீமிசலில் அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு!




மீமிசலில் அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது. 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிகபட்சமாக 111 டிகிரி வரை வெயிலின் தாக்கம் பதிவாகியுள்ளது. இதனால், தமிழகத்தில் உள்ள நீர் நிலைகள் அனைத்தும் வற்றி, வறண்டு காணப்படுகிறது. கடுமையான வறட்சி நிலவி வருகிறது. கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் விடுபட வேண்டி அனைத்து கட்சி சார்பில் கோடை பந்தல் திறக்கப்பட்டு வருகிறது.

எதிர்கட்சி  தலைவர் எடப்பாடி பழனிச்சாமி  அவர்களின் வழிகாட்டுதலின்படி, புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில்  ஒன்றியம் அதிமுக சார்பில் 04-05-2024 சனிக்கிழமை காலை 11.00 மணியளவில் மீமிசல் கடைவீதியில் கோடைகால தண்ணீர் பந்தலை புதுக்கோட்டை மாவட்ட ஆவுடையார் கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் நரேந்திர ஜோதி தலைமையேற்று துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அதிமுக ஆவுடையார்கோவில்  ஒன்றிய நிர்வாகிகள் , மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் கலந்துகொண்டனர்.





எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments