கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை பள்ளிகளுக்கு, தமிழக அரசு எச்சரிக்கை




கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிகளுக்கு, தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோடை விடுமுறை

பொதுத்தேர்வு, ஆண்டு இறுதித்தேர்வு நிறைவு பெற்ற நிலையில், கடந்த மாதத்தில் இருந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? என்பது பற்றி பள்ளிக்கல்வித் துறை இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட சில பள்ளிகள் அடுத்த மாதம் (ஜூன்) 6-ந்தேதி திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. கோடை விடுமுறை பள்ளிகளுக்கு விடப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில், சில பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக புகார்கள் பள்ளிக்கல்வித்துறைக்கு வந்துள்ளன. இந்த புகாரை தொடர்ந்து பள்ளிக்கல்வித் துறை அனைத்து மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.

பள்ளிகள் மீது நடவடிக்கை

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கோடை விடுமுறை அனைத்து பள்ளிகளுக்கும் அறிவித்த பின்னரும், பல்வேறு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருக்கின்றன.

கடுமையான வெப்பம் நிலவும் இந்த காலத்தில் கட்டாயமாக சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று தங்களுடைய ஆளுகைக்கு உட்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இதில் அனைத்து கல்வி அலுவலர்களும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் கதை....

இது ஒன்றும் புதிதான புகார் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையில் இந்த புகார்கள் வருவதும், அதற்கு பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கை விடுவதும் தொடர் கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments