மீமிசல் அருகே கொளுவனூரில் கட்டுப்பாட்டை இழந்த கார் மின்கம்பத்தில் மோதி விபத்து!




மீமிசல் அருகே கொளுவனூரில்  கார் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்தவர்கள் படுகாயத்துடன் உயிர் தப்பிய நிலையில் மின்கம்பம் சேதமடைந்து, அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகே திருச்சி - மீமிசல் மாநில சாலையில்  மீமிசலை பகுதியை நோக்கி கார் சென்று கொண்டிருந்தது.

அப்போது கொளுவனூரில் திடீரென கார் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.


மின்கம்பத்தில் மோதிய கார் அருகில் இருந்த பள்ளத்திற்குள் இறஙகி மரத்தில் மோதி நின்றது. கார் மோதியதில் மின்கம்பம் இரண்டாக உடைந்து கீழே விழுந்தது, அதனுடன் இணைக்கப்பட மின்கம்பிகளும் அறுந்து தரையில் விழுந்தன.

இதில் காரில் பயணித்தவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு அருகில் உள்ள மணமேல்குடி மருத்துவமனைக்கு தமுமுக தவ்ஹீத் ஜமாத் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

மேல் சிகிச்சைக்காக காரைக்குடி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

விபத்தால்  சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments