நான்கு வழி சாலை
தமிழ்நாடு அரசு பல்வேறு மாவட்டங்களில் நகரின் வளர்ச்சியையும், போக்குவரத்து நெரிசலையும் கட்டுப்படுத்தும் வகையில் நான்கு வழிசாலை திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. தற்போது கூட முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தில் எடுக்கப்பட்ட 64 நான்கு வழி சாலை பணிகளில் 9 பணிகள் முடிவடைந்துள்ள. மீதி இருக்கும் 55 சாலைகளில் விரைந்து பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை - அறந்தாங்கி சாலை
அதே சமயம் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து அறந்தாங்கி செல்லும் முக்கிய சாலையை நான்கு வழி சாலையாக மாற்றக் கோரி, பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. இந்த இரு இடங்களுக்கும் இடைப்பட்ட தூரம் 36 கிலோ மீட்டர். பயண நேரம் குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது ஆகும்.
நான்கு வழிச்சாலையாக மாற்ற கோரிக்கை
மேலும் போக்குவரத்து நெரிசலும் அதிகம் காணப்படுகிறது. இதனால் புதுக்கோட்டை அறந்தாங்கி சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனர்.
நான்கு வழிச்சாலையினால் பயன்கள்
நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படும் பட்சத்தில், மீன் வர்த்தகம் மற்றும் விவசாய விளை பொருட்களை அடுத்த மாவட்டத்திற்கு எளிதாகவும், விரைவாகவும் எடுத்து செல்லமுடியும். மேலும் மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ்கள் உரிய நேரத்தில் செல்ல ஏதுவாக இருக்கும். அதோடு படிப்பு மற்றும் தொழிலுக்காக வந்து செல்பவர்களுக்கும் வசதியாக அமையும்.
இது சம்பந்தமாக கடந்த சில நாட்களுக்கு முன் டென்டர் விடப்பட்டது.
எச்சரிக்கை:அறந்தாங்கியிலிருந்து புதுக்கோட்டை செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு. புதுக்கோட்டை-அறந்தாங்கி சாலை விரிவாக்கம் பணியின் காரணமாக கைக்குறிச்சி- புதுகை சாலையின் இருபுறமும் குழிகள் மற்றும் இதர வேலைகள் நடைபெறுவதால் இருசக்கர வாகனங்களில் பயனிப்போர் கவனமாக செல்லவும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.