மணமேல்குடி அருகே வடக்கு அம்மாப்பட்டினத்தில் இலவச மருத்துவ முகாம் !




புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே வடக்கம்மாபட்டினம் கிராமத்தில் ஊர் ஜமாத்தார்கள், இளைஞர்கள் மற்றும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் இருதயம், மகளிர் மற்றும் குழந்தைகள் பொது மருத்துவமும், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனையும் இலவசமாக நடைபெற்றது. இதில் முன்னணி மருத்துவர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். இந்த முகாமில் 500க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் இலவசமாக சிகிச்சை பெற்றனர். இந்த முகாமில் ஊர் ஜமாத் தலைவர்கள், நிர்வாகிகள், இளைஞர்கள், சமூக ஆர்வலர் அப்பாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments