மழையினால் சேதமடைந்த சாலைகள், மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும் அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்




புதுக்கோட்டை மாவட்டத்தில் மழையினால் சாலைகள், மின்கம்பங்கள் சேதமடைந்ததை சீரமைக்க வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் மெர்சி ரம்யா அறிவுறுத்தினார்.

கலந்தாய்வு கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வினியோகம் வழங்குவது குறித்தும், சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது குறித்தும் மற்றும் கோடைகால மழை குறித்தும், அரசு அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகததில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது:- நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் உள்ளாட்சி பகுதிகளில், பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கப்படுவதை தொடர்புடைய அலுவலர்கள் உறுதிப்படுத்திட வேண்டும். மேலும் குடிநீர் சரிவர கிடைக்காத பகுதிகளில் மாற்று ஏற்பாடுகள் மூலம் பொதுமக்களுக்குகுடிநீர் வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும்.

மின்கம்பங்களைசீரமைத்தல்

மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி பகுதிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக, திருத்தியமைக்கப்பட்ட மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு கூட்ட நடவடிக்கைகளின்படி, உள்ளாட்சிப் பகுதிகளில் வட்டார அளவிலான குழு அமைக்கப்பட்டு சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மாவட்டத்தில், சீமைக்கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றிட வேண்டும். கோடை மழையினால் பாதிக்கப்பட்ட சாலையினை சரிசெய்திடவும், மேலும் மழையினால் சேதமடைந்த மின் கம்பங்களை உடனடியாக சரிசெய்திட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சீனிவாசன், செயற்பொறியாளர் (தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்) அய்யாசாமி, நகராட்சி ஆணையர் ஷியாமளா உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments