கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தலைமை ஆசிரியரின் முக்கிய அறிவிப்பு!கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் தங்களுடைய தொலைபேசியை எடுத்துக்கொண்டு நாளை 22.05.2024 பள்ளி கூடத்திற்கு வரவேண்டும் என தலைமை ஆசிரியர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசுப் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதை உறுதி செய்யும் வகையிலும், மாணவர்கள் இடைநிற்றலின்றி கல்வி பயில்வதைக் கருத்தில் கொண்டும், பல்வேறு சிறப்பு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. 

14 வகையான மாணவர் நலத் திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்நலத்திட்டங்கள் அனைத்தையும் பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர் அறிந்திருக்க, பெற்றோருக்குத் தெரிவிப்பதற்கு ஏதுவாக அவசியமானதாகும். இதனைப் பெற்றோரின் கைப்பேசி எண்களுக்கு, கல்வி மேலாண்மைத் தகவல் முகமை மூலமாகத் தகவல் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முன்னெடுப்பினை செல்வனே மேற்கொள்ள வேண்டுமாயின், பெற்றோரின் சரியான கைப்பேசி எண்களைப் பெற்று கல்வி மேலாண்மைத் தகவல் முகமை தளத்தில் உள்ளீடு செய்தல் வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பள்ளிக்கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் செயல்பட்டு கொண்டிருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுடைய பெற்றோரின் சரியான கைப்பேசி எண்களைப் பெற்று கல்வி மேலாண்மைத் தகவல் முகமை தளத்தில் உள்ளீடு செய்தல் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோரின் கைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு OTP எண் கேட்டால் பெரும்பாலான பெற்றோர்கள் OTP சொல்வதற்கு தயங்குகின்றனர். எனவே பெற்றோர்களின் தொலைபேசி எண்களை சரிபார்க்கும் விதமாக நாளை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் தங்களுடைய தொலைபேசியை எடுத்துக்கொண்டு நேரடியாக பள்ளிக்கூடத்திற்கு வந்து உங்களுடைய தொலைபேசி எண்ணை சரிபார்த்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தகவல்: தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, கோபாலப்பட்டிணம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments