புதுக்கோட்டை மாவட்டத்தில்
497 ஊராட்சிகளில் நாளை சிறப்பு கிராம சபை கூட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 497 ஊராட்சிகளில் நாளை (வெள்ளிக்கிழமை) சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
சிறப்பு கிராம சபை கூட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 ஊராட்சிகளிலும் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் `கலைஞரின் கனவு இல்லம்' திட்டம் 2024-25-ம் ஆண்டின் கீழ் கிராம ஊராட்சி அளவிலான குழுவினரால் தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகளின் பெயர் பட்டியலுக்கு சிறப்பு கிராம சபையில் இடம் பெற ஒப்புதல் அளித்தல், ஊரக குடியிருப்புகள் பழுது பார்க்கும் திட்டம் 2024-25-ம் ஆண்டின் கீழ் கிராம ஊராட்சி அளவிலான குழுவினரால் தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகளின் பெயர் பட்டியலுக்கு சிறப்பு கிராம சபையில் இடம் பெற செய்து ஒப்புதல் அளித்தல், 15-வது நிதிக்குழு மானியம் 2024-25-க்கான தேர்வு செய்யப்பட்ட பணிகளுக்கு கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றுதல் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
பொதுமக்கள்
மேற்குறிப்பிட்டுள்ள அரசின் திட்டங்கள் மற்றும் ஊராட்சியின் செயல்பாடுகள் பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு பயன்பெறும் வகையில் பொதுமக்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களை சார்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
மேற்கண்ட தகவலை கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.