பொற்பனைக்கோட்டை
புதுக்கோட்டை அருகே அமைந்துள்ளது பொற்பனைக்கோட்டை கிராமம். இந்த கிராமத்தில் சங்ககாலத்தில் கோட்டை இருந்ததற்கான அடையாளங்கள் கிடைத்தன. இதன் அடிப்படையில் தமிழ்நாடு தொல்லியல் துறை மூலம் அகழாய்வு பணி முதற்கட்டமாக கடந்த ஆண்டில் (2023) மே மாதம் தொடங்கியது.
இதில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் தொல்லியல் துறையினர் குழி தோண்டி அகழாய்வு மேற்கொண்டனர். இதில் தங்க அணிகலன்கள், வட்ட சில்லுக்கள், கண்ணாடி மணிகள், படிக கல் மணிகள், சுடுமண் விளக்கு, எலும்பு முனை கருவி, இரும்பிலான பொருட்கள், செங்கல் கட்டுமான நீர்வழித்தடங்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன. இதனை ஆவணப்படுத்தும் பணி நடைபெற்றது. முதற்கட்ட அகழாய்வு கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்தது.
2-ம் கட்ட அகழாய்வு
இதைத்தொடர்ந்து 2-ம் கட்ட அகழாய்வு பணி மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் பட்ஜெட்டில் வெளியானது. இதையடுத்து 2-ம் கட்ட அகழாய்வு பணிக்காக இடம் தேர்வு மற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அகழாய்வு பணிக்கான உரிமத்தை புதுப்பிக்க மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அனுமதி வந்ததும் 2-ம் கட்ட அகழாய்வு பணி விரைவில் தொடங்கலாம். இதனால் அனுமதிக்காக காத்திருப்பதாக தொல்லியல் துறை வட்டாரத்தில் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.