திருச்சி-ஜித்தா வாரத்தில் ஒருமுறை விமான சேவை-பயணிகள் மகிழ்ச்சி!






ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

இந்த விமான நிலையத்தின் மூலம் பல்வேறு மாவட்ட மக்கள் தற்போது வரை பயணடைந்து வருகின்றனர். இந்த விமான நிலையத்தில் இருந்து பல்வேறு விமான நிறுவனங்கள் பல்வேறு வெளிநாடுகளுக்கும் விமானங்களை இயக்கி வருகிறது. இந்நிலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சார்பில் சமீபத்தில் சிறப்பு விமானங்கள் மும்பைக்கு இயக்கப்பட்டன. இந்த விமானமானது சீட்கள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டு புல்லாக சென்றது.

தினசரி சேவை

இதனை தினசரி சேவையாக இயக்கப்பட வேண்டும் என்று பயணிகள் அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் மூலம் சவுதி அரேபியாவின் ஜித்தாவுக்கு விமானம் இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

​சவுதி அரேபியாவின் ஜித்தா

அதவாது ஒவ்வொரு புதன்கிழமையும், சவுதி அரேபியாவின் ஜித்தா நகருக்கு திருச்சியில் இருந்து இயக்கப்படும். அதேபோல் ஜித்தாவில் இருந்து திருச்சிக்கும் விமானம் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து புதன்கிழமைதோறும் மதியம் 12.55 நிமிடங்களுக்கு புறப்பட்டு ஜித்தா நகரை மாலை 6 மணி 25 நிமிடங்களுக்கு சென்றடையும்

பயணிகள் இறங்க தேவையில்லை
பயணிகள் இறங்க தேவையில்லை

அதேபோல் அங்கிருந்து 7 மணி 25 நிமிடங்களுக்கு புறப்பட்டு மங்களூரு வழியாக வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் பெட்ரோல் போட மங்களூரில் தரையிறங்கி ஏறும். பயணிகள் இறங்கத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

​புனித பயணம்

புனித பயணம் செல்பவர்களும் இதில் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் கூடுதல் விமானங்கள் இயக்க வேண்டும் என்று மக்கள் அனைவரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments