தொண்டி மீன்மார்க்கெட்
ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரிய அளவில் மீன்கள் விற்பனை செய்யக்கூடிய இடமாக தொண்டி மீன் மார்க்கெட் விளங்கி வருகிறது. இங்கு தினமும் சுமார் 10-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கு கடல் உணவுகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் மீன் வகைகளை கொள்முதல் செய்வது வழக்கம்.
கடந்த 15 தினங்களுக்கும் மேலாக நண்டு, கணவாய் போன்ற கடல் உணவுகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் பெரிய அளவில் மீன் வகைகளை கொள்முதல் செய்யவில்லை. இதன் காரணமாக நண்டு, கணவாய்மீன் வகைகளின் விலை பெரிதும் குறைந்துள்ளது.
விலை வீழ்ச்சி
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு கிலோ நண்டு 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் கணவாய் மீன் ரூ.520-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ.400-க்கும், ரூ.380-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் போன்ற பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தொண்டி நண்டு, கணவாய் வகைகள் ஏற்றுமதி நிறுவனங்களிடம் அதிக அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதால் தற்போது ஏற்றுமதி நிறுவனங்கள் பெரிய அளவில் நண்டு, கணவாய் போன்றவற்றை கொள்முதல் செய்யவில்லை.
ஏற்றுமதி நிறுவனங்கள்
ஏற்கனவே ஏற்றுமதி நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு ஒரு கிலோ நண்டு ரூ.450 முதல் ரூ.500 வரை கொள்முதல் செய்தது. கணவாய் 380-க்கு கொள்முதல் செய்த நிலையில் தற்போது நண்டு, கணவாய் வகைகள் ஒரு கிலோ தலா ரூ.280-க்கும் கொள்முதல் செய்கிறது.
இதனால் மீன் வியாபாரிகள் மற்றும் மீனவர்களுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் மீனவர்களும், வியாபாரிகளும் நண்டு, கணவாய் வகைகளை சில்லறை விலைக்கு விற்க தொடங்கியுள்ளனர்.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு வரை ஏற்றுமதி நிறுவனங்கள் மட்டுமே கொள்முதல் செய்து வந்த நிலையில் தற்போது பொதுமக்கள் நண்டு, கணவாய் வகைகளை பேரம் பேசி மிகக்குறைந்த விலைக்கு வாங்கி சென்றனர். இதனால் பொதுமக்கள், மீன் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2 வார காலமாக ஏற்றுமதி நிறுவனங்கள் கொள்முதல் செய்யாததால் நண்டு, மீன் விலை பெரிதும் வீழ்ச்சி அடைந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.