சாலை விரிவாக்கப் பணிகளுக்காக மரங்களை அகற்றும்போது, ஒரு மரத்துக்கு ஈடாக 20 மரக்கன்றுகளை நட்டு வைத்து அவற்றை ஜியோ டேக்-இல் படத்துடன் பதிவு செய்ய வேண்டும்
சாலை விரிவாக்கப் பணிகளுக்காக மரங்களை அகற்றும்போது, ஒரு மரத்துக்கு ஈடாக 20 மரக்கன்றுகளை நட்டு வைத்து அவற்றை ஜியோ டேக்-இல் படத்துடன் பதிவு செய்ய வேண்டும் என புதுக்கோட்டை ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா அறிவுறுத்தினாா்.
புதுக்கோட்டை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மாவட்ட பசுமைக் குழு கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் மேலும் பேசியது:
தமிழ்நாட்டின் வனப்பரப்பை 33 சதவிகிதம் அளவுக்கு உயா்த்தும் நோக்கத்துடன் தமிழ்நாடு பசுமை இயக்கம் உருவாக்கப்பட்டு, மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் 2024-25-ஆம் ஆண்டில் 23 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்படவுள்ளன.
குளத்தூா் வட்டம் கீரனூரிலிருந்து கிள்ளுக்கோட்டை செல்லும் சாலையை விரிவாக்கம் செய்வதற்காக 10 மரங்களை அகற்றுவதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. இதுபோல, விரிவாக்கப் பணிகளுக்காக மரங்களை அகற்றும்போது, ஒரு மரத்துக்கு ஈடாக 20 மரக்கன்றுகளை நட்டு வைத்து அவற்றைப் படம் எடுத்து, ஜியோ டேக்கில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
சீமைக்கருவேல மரங்களை அகற்றும் திட்டத்தில் குடுமியான்மலை அரசு விதைப் பண்ணை வளாகத்திலுள்ள 1823 சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கும் பசுமைக் குழுவில் அனுமதி அளிக்க வேண்டும் என்றாா் மொ்சி ரம்யா.
கூட்டத்தில் பேசிய பசுமைக் குழு உறுப்பினா் பேரா. சா. விஸ்வநாதன், பொதுவாக மின் கம்பத்துக்கு இடையூறு உள்ளிட்ட காரணங்களைச் சொல்லி மரங்களை வெட்டும் போக்கு மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடா்ந்து கொண்டே இருக்கிறது. இதனைத் தடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் (பொ) ஆா். ரம்யாதேவி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் முருகேசன், மாவட்ட வன அலுவலா் சோ. கணேசலிங்கம், வனச்சரக அலுவலா் சதாசிவம் மற்றும் பசுமைக் குழு உறுப்பினா் கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.