புதுக்கோட்டை கோர்ட்டில் நீதிபதிகள் பொறுப்பேற்பு




தமிழகத்தில் நீதிபதிகள் பணியிட மாற்றம் மற்றும் காலியாக உள்ள பணியிடங்களுக்கு நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதியாக சுபத்ராதேவி, மகிளா கோர்ட்டு நீதிபதியாக ரஜினி, தலைமை குற்றவியல் நீதிபதியாக பாலகிருஷ்ணன், கூடுதல் சார்பு நீதிமன்ற நீதிபதியாக வெங்கடேச பெருமாள், குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியாக விஸ்வநாத் ஆகியோர் புதுக்கோட்டை கோர்ட்டில் பொறுப்பேற்றனர். அவர்களுக்கு புதுக்கோட்டை வக்கீல்கள் சங்கம் சார்பில் வரவேற்பு அளித்து வாழ்த்து கூறினர். இதில் வக்கீல் சங்க தலைவர் சின்னராஜ், சங்க துணை தலைவர் பரமசிவம் உள்பட வக்கீல்கள் பலர் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments