ஆலோசனை கூட்டம்
புதுக்கோட்டை அருகே அமைந்துள்ளது கவிநாடு கண்மாய். பல ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாயிலும், கரைப்பகுதியிலும் கருவேல மரங்கள் வளர்ந்து அதிகம் காணப்படுகிறது. இதனை அகற்றி நன்மை தரக்கூடிய மரங்களை நடுவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கி தெரிவித்ததாவது:-
கவிநாடு கண்மாயினை தூர்வாரி, குளக்கரைகளில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி, மழைநீரினை சேகரித்து, நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்வான பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இங்கு செடி, கொடிகள், சீமைக்கருவேல மரங்கள், முட்புதர் உள்ளிட்டவை வளர்ந்துள்ளது. இவை அனைத்தையும் அகற்றி நன்மை பயக்கும் மரக்கன்றுகளை நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
கருவேல மரங்களை அகற்றுதல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றிடும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிராம ஊராட்சிகளில் சீமைக்கருவேல மரங்களை அகற்றிட, ஊராட்சி அளவிலான ஒருங்கிணைப்புக் குழு அமைத்து பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே புதுக்கோட்டை மாவட்டத்தை சீமைக்கருவேல மரங்கள் இல்லாத மாவட்டமாக மாற்றிட அரசு அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) ரம்யாதேவி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.