கடலோர பாதுகாப்பு பணி: ஊர்க்காவல் படையில் சேர மீனவ வாலிபர்கள் விண்ணப்பிக்கலாம் 14-ந் தேதி கடைசி நாள்






புதுக்கோட்டை மாவட்டத்தில் கடலோர பாதுகாப்பு பணியில் ஊர்க்காவல் படையில் சேர மீனவ வாலிபர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு வருகிற 14-ந் தேதி கடைசி நாளாகும்.

ஊர்க்காவல் படை

புதுக்கோட்டை மாவட்ட கடற்கரையோர போலீஸ் நிலைய ஊர்க்காவல் படை பணிகளுக்கு மீனவ இளைஞர்களிடம் இருந்து (மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளிடம் சான்று பெறப்பட வேண்டும்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விண்ணப்பங்களை வருகிற 10-ந் தேதி முதல் ஊர்க்காவல் படை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வருகிற 14-ந் தேதி கடைசி நாளாகும். மீனவ சமுதாய இளைஞர்கள் 10-ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். 18 வயது நிறைவடைந்தும், 50 வயது நிறைவடையாமலும் இருக்க வேண்டும். கடற்கரை பகுதியில் 20 கிலோ மீட்டர் சுற்றுவட்டார பகுதிக்குள் வசிக்க வேண்டும். நீச்சல் தெரிந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்குள் குறைந்தபட்சம் 1 அல்லது 2 கி.மீ. தூரம் கடற்கரை மணலில் ஓட வேண்டும்.

சான்றிதழ்கள்

குற்ற வழக்கிலோ, அரசியல் கட்சிகளிலோ சம்பந்தப்பட்டவர்களாக இருக்கக்கூடாது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அடுத்துள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்திற்கு வருகிற 10 முதல் 14-ந் தேதிக்குள் காலை 10 முதல் மாலை 5 மணி வரை கல்வி சான்றிதழ்களின் அசல் மற்றும் நகலுடன் நேரில் வருமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments