மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்; 10-ந் தேதி முதல் நடக்கிறது




நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. இதையடுத்து புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்கள் தொடர்பான கூட்டம் வருகிற 10-ந் தேதி முதல் நடைபெறும். பொதுமக்கள் வழக்கம்போல் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளிக்கலாம். மேற்கண்ட தகவலை கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments