தொடர் வழிப்பறி சம்பவம்: சிறுவன் உள்பட 3 பேர் கைது நகை-பணம் மீட்பு




கந்தர்வகோட்டை அருகே தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு நகை, பணம் மீட்கப்பட்டது.

வழிப்பறி சம்பவம்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே சவுரியாம்பட்டி பிரிவு சாலை விராலிப்பட்டி பிரிவு சாலை, ஆதனக்கோட்டை அருகே வளவம்பட்டியில் இருசக்கர வாகனங்களில் சென்றவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி 3 பேர் வழிப்பறியில் ஈடுபட்டனர். தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த 3 சம்பவங்களில் அவர்களிடம் இருந்து நகை, பணம், செல்போனை பறித்துவிட்டு மர்மநபர்கள் தப்பியோடினர். இது தொடா்பாக கந்தர்வகோட்டை, ஆதனக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்தனர்.

3 பேர் கைது

இந்த நிலையில் இவ்வழக்குகளில் தேடப்பட்டு வந்த தஞ்சாவூர் மாவட்டம், மேலக்களக்குடி அருகே கடுக்காவலை சேர்ந்த செல்வம் (வயது 24), தஞ்சாவூரை சேர்ந்த 17 வயது சிறுவன், கீழ்பாதியை சேர்ந்த அறிவழகன் என்ற குட்டார் (20) ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 6 பவுன் தங்கச்சங்கிலி, மோதிரம், ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் திருடர்களை கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே பாராட்டினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments