‛‛20 சனிக்கிழமைகளில் வேலை’’.. வழக்கத்தை விட கூடுதல் நாள் பள்ளி செயல்படும்! ஷாக்கில் மாணவர்கள்
ஜுன் 10ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் தான் வரும் 2024-25ம் கல்வி ஆண்டில் ஒவ்வொரு மாதத்துக்கும் எத்தனை வேலை நாட்கள் என்றும், முதல் பருவத்தேர்வு , இரண்டாம் பருவத்தேர்வு மற்றும் மூன்றாம் பருவத்தேர்வுகள் எப்போது நடத்தப்படும், தேர்வுக்கு பிறகு எத்தனை நாட்கள் விடுப்பு அளிக்கப்படும் என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் ஜுன் 6ம் தேதி திறக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டது.

அதன்படி ஜுன் 6ம் தேதிக்கு பதில் ஜுன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

இந்நிலையில் தான் 2024-2025ம் கல்வி ஆண்டுக்கான பள்ளி வேலை நாட்கள் குறித்த விபரம் வெளியாகி உள்ளது. அதன்படி ஜ%ன் 10ம் தேதி பள்ளி திறக்கப்பட உள்ளது. இந்த மாதத்தில் மொத்தம் 15 நாட்கள் வேலை நாட்களாகும். சனிக்கிழமையான ஜுன் 29ம் தேதி பள்ளி செயல்பட உள்ளது. ஜுலை மாதம் 23 நாட்கள் பள்ளி செயல்படும். ஜுலை 23ம் தேதி பள்ளி செயல்படும். ஆகஸ்ட் மாதம் சனிக்கிழமையான 10, 24 ஆகிய தேதிகளுடன் சேர்த்து மொத்தம் 22 நாட்கள் வேலை நாட்களாகும்.

செப்டம்பர் மாதம் சனிக்கிழமையான 14, 21 ஆகிய 2 நாட்கள் சேர்த்து 21 /நாட்கள் வேலை நாட்களாகும். அக்டோபர் மாதம் 5, 19 தேதிகளில் வரும் சனிக்கிழமை உள்பட மொத்தம் 21 நாட்கள் வேலை நாட்களாகும். நவம்பர் மாதம் சனிக்கிழமையான 9, 23 ஆகிய தேதிகள் உள்பட மொத்தம் 23 நாட்கள் வேலை நாட்களாகும். டிசம்பர் மாதத்தில் சனிக்கிழமையான 12, 21 ஆகிய தேதிகளுடன் சேர்த்து 18 நாட்கள் வேலை நாட்களாகும்.

ஜனவரி மாதம் சனிக்கிழமையான 11ம் தேதியை சேர்த்து மொத்தம் 20 நாட்கள் வேலை நாட்களாகும். பிப்ரவரி மாதம் சனிக்கிழமையயான 1, 15, 22 ஆகிய தேதிகளை சேர்த்து மொத்தம் 22 நாட்கள் வேலை நாட்களாகும். மார்ச் மாதம் சனிக்கிழமை 1, 22 ஆகிய தேதிகளை சேர்த்து மொத்தம் 22 நாட்கள் வேலை நாட்களாகும். ஏப்ரல் மாதம் 5, 12 ஆகிய தேதிகளில் வரும் சனிக்கிழமையை சேர்த்து 12 நாட்கள் வேலை நாட்களாகும். மே மாதம் கோடை விடுமுறையாகும்.

மொத்தம் 365 நாட்களில் 220 நாட்கள் பள்ளி வேலை நாட்களாகும். ரசு விடுமுறை, வார விடுமுறை என்று மொத்தம் 145 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. வழக்கமாக 210 நாட்கள் பள்ளிகள் இயங்கும். ஆனால் இந்த முறை கூடுதலாக 10 நாட்கள் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு 2024-2025 ஆண்டில் மட்டும் 20 நாட்கள் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முதல் பருவத்தேர்வு, 2ம் பருவத்தேர்வு, 3ம் பருவத்தேர்வுக்கான தேதிகளும், அதற்கான விடுமுறை நாட்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் முதல் பநருவத்தேர்வு என்பது செப்டம்பர் 20ம் தேதி முதல் 28 ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்பிறகு அக்டோபர் 2ம் தேதி வரை 5 நாட்கள் விடுமுறை வழங்கப்படுகிறது.

இரண்டாம் பருவத்தேர்வு என்பது டிசம்பர் 16ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்பிறகு ஜனவரி 1ம் தேதி வரை 9 நாட்கள் விடுமுறை வழங்கப்படுகிறது. மூன்றாம் பருவத்தேர்வு என்பது ஏப்ரல் 9 ம் தேதி முதல் ஏப்ரல் 17 ம் தேதி வரை நெடைறப உள்ளது. அதன்பிறகு கோடை விடுமுறை ஏப்ரல் 18 முதல் மே 31ம் தேதி வரை 44 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனால் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 25ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments