தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சரவையில் இலாகாக்கள் அறிவிப்பு யார் யாருக்கு எந்த துறை?




புதிதாக பதவியேற்றுள்ள மத்திய மந்திரிகளுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதில் 13 துறைகளுக்கு முந்தைய மந்திரிகளே நியமிக்கப்பட்டு உள்ளனர்.

புதிய மந்திரிசபை பதவியேற்பு

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று உள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 3-வது முறையாக மோடி நேற்று முன்தினம் பிரதமராக பதவியேற்றார்.

அவருடன் 30 கேபினட் மந்திரிகள், 5 தனிப்பொறுப்புடன் கூடிய ராஜாங்க மந்திரிகள், 36 ராஜாங்க மந்திரிகள் என மேலும் 71 பேரும் மத்திய மந்திரிகளாக பதவியேற்றுக்கொண்டனர்.

பிரதமர் மோடியின் மந்திரி சபையில் அவருடன் சேர்த்து 61 பேர் பா.ஜனதாவில் இருந்து மந்திரிகளாகி இருக்கிறார்கள். மீதமுள்ள 11 இடங்கள் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.

பிரதமர் கவனிக்கும் இலாகாக்கள்

இதில் தெலுங்குதேசம் மற்றும் ஐக்கிய ஜனதாதளத்துக்கு தலா 2 பதவிகளும், மீதமுள்ள 7 கட்சிகளுக்கு தலா ஒரு பதவியும் வழங்கப்பட்டு உள்ளன.

புதிதாக பதவியேற்றுக்கொண்ட மந்திரிகளுக்கு நேற்று இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. பிரதமர் மோடி பரிந்துரையின்பேரில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இலாகாக்களை ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த பட்டியலை நேற்று மாலையில் ஜனாதிபதி மாளிகை வெளியிட்டது.

இதில் பிரதமர் மோடி பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளி, அனைத்து முக்கிய கொள்கை விஷயங்கள் மற்றும் பிறருக்கு ஒதுக்கப்படாத அனைத்து இலாகாக்களையும் கவனிப்பார்.

துறை மாறாத மந்திரிகள்

கேபினட் மந்திரிகளில் முக்கியமாக முந்தைய மந்திரி சபையில் முக்கிய இடம் வகித்த ராஜ்நாத் சிங் (ராணுவம்), அமித்ஷா (உள்துறை, கூட்டுறவு), நிர்மலா சீதாராமன் (நிதி, கார்பரேட் நலன்), நிதின் கட்காரி (சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்), ஜெய்சங்கர் (வெளியுறவு). பியூஸ் கோயல் (வர்த்தகம் மற்றும் தொழில்) ஆகியோர் அந்தந்த துறைகளை தக்க வைத்து உள்ளனர்.

இதைப்போல தர்மேந்திர பிரதான் (கல்வி), சர்பானந்தா சோனோவால் (நீர்வழி, துறைமுகங்கள்), அஸ்வினி வைஷ்ணவ் (ரெயில்வே, ஒளிபரப்பு, தகவல் தொழில்நுட்பம்), ஜூவல் ஓரம் (பழங்குடியினர் நலன்), பூபேந்திர யாதவ் (சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாடு), ஹர்தீப் சிங் புரி (பெட்ரோலியம், இயற்கை எரிவாயு). வீரேந்திர குமார் (சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்) ஆகியோருக்கும் முந்தைய துறைகளே ஒதுக்கப்பட்டு உள்ளன.

புதுமுகங்களின் துறைகள்

புதுமுகங்களை பொறுத்தவரை பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், ரசாயனம் மற்றும் உரத்துறை ஒதுக்கப்பட்டு உள்ளது.

சிவராஜ் சிங் சவுகான் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன், ஊரக மேம்பாட்டுத்துறைகள் பெற்று இருக்கிறார். மனோகர் லால் கட்டார் மின்சாரம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு துறைகளுக்கு மந்திரி ஆகியிருக்கிறார்.

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமிக்கு கனரக தொழில்கள் மற்றும் உருக்குத்துறை ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஜிதன் ராம் மஞ்சி சிறு, குறு நடுத்தர தொழில்கள் துறை பெற்றுள்ளார்.

ராஜீவ் ரஞ்சன் சிங் (எ) லாலன் சிங்குக்கு பஞ்சாயத்து ராஜ், மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறையும், ராம் மோகன் நாயுடுவுக்கு சிவில் விமான போக்குவரத்து துறையும், சிராக் பஸ்வானுக்கு உணவு பதப்படுத்தல் துறையும், சி.ஆர். பாட்டீலுக்கு ஜல்சக்தி துறையும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

இலாகா மாறிய மந்திரிகள்

முந்தைய ஆட்சியில் சுற்றுலாத்துறை மந்திரியாக இருந்த கிஷன் ரெட்டி தற்போது நிலக்கரி மற்றும் சுரங்கத்துறையை பெற்று இருக்கிறார். மேலும் சுகாதாரத்துறையை கவனித்த மன்சுக் மாண்டவியா தற்போது தொழிலாளர், வேலைவாய்ப்பு துறைகளுடன் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையையும் பெற்றுள்ளார்.

இதைப்போல உணவு பதப்படுத்துதல், சட்டம் உள்ளிட்ட துறைகளை முந்தைய ஆட்சியில் கவனித்த கிரண் ரிஜிஜுவுக்கு தற்போது நாடாளுமன்ற விவகாரத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன்

ஜல்சக்தி துறை மந்திரியாக இருந்த கஜேந்திர சிங் செகாவத் கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை மந்திரியாகி இருக்கிறார். கல்வித்துறை இணை மந்திரியாக இருந்த அன்னபூர்ணா தேவிக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை கேபினட் பொறுப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது.

சிவில் விமானப்போக்குவரத்து மந்திரியாக இருந்த ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு தகவல் தொடர்பு மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாடு துறையும், கால்நடைத்துறை மந்திரியாக இருந்த கிரிராஜ் சிங்குக்கு ஜவுளித்துறையும், நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரியாக இருந்த பிரகலாத் ஜோஷிக்கு நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது வினியோகம், புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி துறையும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

சட்ட மந்திரி அர்ஜுன் ராம் மெக்வால்

தனிப்பொறுப்புடன் கூடிய ராஜாங்க மந்திரிகளில் முக்கியமாக ஜிதேந்திர சிங் (அறிவியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகள்), அர்ஜுன் ராம் மெக்வால் (சட்டம் மற்றும் நீதி) ஆகியோர் ஏற்கனவே வகித்த இலாகாக்களை பெற்று உள்ளனர். ராஜாங்க மந்திரிகளில் முக்கியமாக தமிழகத்தை சேர்ந்த எல்.முருகனுக்கு நாடாளுமன்ற விவகாரத்துறையும், தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறையும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

கேரளாவில் பா.ஜனதாவை கொண்டு சேர்த்த நடிகர் சுரேஷ் கோபிக்கு சுற்றுலா, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

மத்திய மந்திரிகளுக்கான இலாகா ஒதுக்கீடு விவரம் வருமாறு:-

பிரதமர் நரேந்திர மோடி - பிரதமர், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளி, அனைத்து முக்கிய விஷயங்கள், மற்றும் பிறருக்கு ஒதுக்கப்படாத இலாகாக்கள்

கேபினட் மந்திரிகள்

1. ராஜ்நாத் சிங் - ராணுவம்

2. அமித்ஷா - உள்துறை, கூட்டுறவுத்துறை

3. நிதின் கட்காரி - சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை

4. ஜே.பி.நட்டா - சுகாதாரம், ரசாயனம், உரத்துறை

5. சிவராஜ்சிங் சவுகான் - வேளாண்மை, விவசாயிகள் நலன்,

ஊரக வளர்ச்சித்துறை

6. நிர்மலா சீதாராமன் - நிதி, கம்பெனிகள் விவகாரம்

7. ஜெய்சங்கர் - வெளியுறவுத்துறை

8. மனோகர்லால் கட்டார் - மின்துறை, வீட்டுவசதி, ஊரகநலன்

9. குமாரசாமி - கனரக தொழில், உருக்கு

10.பியூஸ் கோயல் - தொழில், வர்த்தகம்

11.தர்மேந்திர பிரதான் - கல்வி

12.ஜித்தன் ராம் மன்ஜி - சிறு, நடுத்தர தொழில்கள்

13.ராஜீவ்ரஞ்சன் சிங் - பஞ்சாயத்துராஜ், மீன்வளம், கால்நடை, பால்வளம்

14.சர்பானந்தா சோனோவால் - துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வளம்

15.வீரேந்திரகுமார் - சமூகநீதி

16.ராம்மோகன் நாயுடு - விமான போக்குவரத்து

17.பிரகலாத் ஜோஷி - உணவு வினியோகம், நுகர்வோர் விவகாரம்

18.ஜூவால் ஓரல் - பழங்குடியினர் நலன்

19.கிரிராஜ் சிங் - ஜவுளித்துறை

20.அஸ்வினி வைஷ்ணவ் - ரெயில்வே, தகவல் தொழில்நுட்பம்,

தொலைத்தொடர்பு

21.ஜோதிராதித்ய சிந்தியா - தகவல் ஒலிபரப்பு

22.பூபேந்திர யாதவ் - சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம்

23.கஜேந்திரசிங் ஷெகாவத் - சுற்றுலா, கலாசாரம்

24.அன்னபூர்ணாதேவி - மகளிர், குழந்தைகள் நலன்

25.கிரண் ரிஜிஜூ - நாடாளுமன்ற விவகாரம், சிறுபான்மையினர் நலன்

26.ஹர்தீப்சிங் புரி - பெட்ரோலியம், இயற்கை எரிவாயு

27.மன்சுக் மாண்டவியா - தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, இளைஞர் நலன், விளையாட்டு

28.கிஷன்ரெட்டி - சுரங்கம், நிலக்கரி

29.சிராஜ் பஸ்வான் - உணவு பதப்படுத்துதல்

30.சி.ஆர்.பட்டேல் - ஜல்சக்தி

ராஜாங்க மந்திரிகள் (தனிப்பொறுப்பு)

1. ராவ் இந்திரஜித் சிங் - புள்ளியியல், திட்டங்கள் மற்றும் அமலாக்கம்

2. டாக்டர் ஜிதேந்திர சிங் - அறிவியல் தொழில்நுட்பம், புவி அறிவியல்

3. அர்ஜூன்ராம் மேக்வால் - சட்டம் மற்றும் நீதித்துறை,

4. ஜாதவ் பிரதாப் ராவ் - ஆயுஷ்

5. ஜெயந்த் சவுத்திரி - திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர்

ராஜாங்க மந்திரிகள்

1. ஜித்தன் பிரசாத் - வணிகம், தொழிற்சாலை மற்றும் தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல்

2. ஸ்ரீபாத் நாயக் - மின்சாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி

3. பங்கஜ் சவுத்திரி - நிதி

4. ஸ்ரீகிருஷ்ணன் பால் - கூட்டுறவுத்துறை

5. ராம்தாஸ் அத்வாலே - சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்

6. ராம்நாத் தாகூர் - வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன்

7. நித்யானந்த் ராய் - உள்துறை

8. அனுபிரியா படேல் - குடும்ப நலன், ரசாயனம், உரத்துறை

9. சோமண்ணா - ஜல்சக்தி, ரெயில்வே

10. சந்திரசேகர பொம்மசானி - ஊரகவளர்ச்சி, தொலைதொடர்பு

11. எஸ்.பி.சிங் பஹேல் -மீன்வளம், கால்நடை மற்றும்

பால்வளம், பஞ்சாயத்துராஜ்

12. ஷோபா கரந்தலாஜே - சிறு, குறு மற்றும் நடுத்துறை தொழில்கள், தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு

13. கீர்த்திவர்தன் சிங் - சுற்றுச்சூழல், வனம் மற்றும் வெளியுறவு,

14. பி.எல்.வர்மா - நுகர்வோர் நலன், உணவு மற்றும்

பொதுவினியோகம், சமூகநீதி

15. சாந்தனு தாக்கூர் - துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வளம்

16. சுரேஷ்கோபி - சுற்றுலா, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு

17. எல்.முருகன் - தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரம்

18. அஜய் டம்டா - சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை

19. பண்டி சஞ்சய்குமார் - உள்துறை

20. கமலேஷ் பஸ்வான் - ஊரக வளர்ச்சி

21. பஹிரத் சவுத்திரி. - வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன்

22. சதீஷ்சந்திர தூபே - நிலக்கரி, சுரங்கம்

23. சஞ்சய் சேட் - பாதுகாப்பு

24. ரவ்னீத் சிங் - உணவு பதப்படு்த்துதல் தொழில்கள்

25. துர்காதாஸ் உய்கி - பழங்குடியினர் நலன்

26. ரக்சா நிகில் கட்சே - இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு

27. சுகாந்த மஜூம்தார் - கல்வி, வடகிழக்கு மேம்பாடு

28. சாவித்திரி தாக்கூர் - மகளிர் மற்றும் குழந்தைகள் நலன்

29. தோஹன் சாகு - வீட்டு வசதி மற்றும் ஊரக நலன்

30. ராஜ்பூஷன் சவுத்திரி - ஜல் சக்தி

31. பூபதிராஜூ ஸ்ரீநிவாச வர்மா - கனரக தொழில்கள், உருக்கு

32. ஹர்ஷ் மல்ஹோத்ரா - கூட்டுறவு, சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை

33. நிமுபென் பாம்பனியா - நுகர்வோர் விவகாரம், பொது வினியோகம்.

34. முரளிதர் மொஹோல் - கூட்டுறவு, விமானம்

35. ஜார்ஜ்குரியன் - சிறுபான்மையினர் நலன், மீன்வளம்,

கால்நடை, பால்வளம்

36. பவித்ர மார்கரீட்டா - வெளியுறவு, ஜவுளி.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments