திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் திருச்சி-ஜித்தா விமான சேவை ரத்து




திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் சார்பில் ஜூன் 12-ந்தேதி முதல் சவுதி அரேபியாவின் வியாபார நகரமான ஜித்தாவிற்கு நேரடி விமான சேவை இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் 5 பயணிகள் மட்டுமே முன்பதிவு செய்து இருந்தனர். இதனால் மதியம் 12.55 மணிக்கு திருச்சியில் இருந்து ஜித்தா நோக்கி புறப்பட வேண்டிய விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து முன்பதிவு செய்து இருந்த 5 பயணிகளும் இரவு 7 மணி அளவில் திருச்சியில் இருந்து மங்களூருக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் அங்கு இருந்து ஜித்தாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments