அதிராம்பட்டினத்தில் இறால் ஏற்றிச்சென்ற சரக்கு வேன் கவிழ்ந்து 3 பேர் காயம்




திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியைச்சேர்ந்தவர் யாசர்( வயது 27), உமர்(25), ஷாஜகான்(30). இவர்கள் 3 பேரும் அதிராம்பட்டினத்தில் உள்ள மார்க்கெட்டிலிருந்து இறால்களை சரக்கு வேன் மூலம் நேற்று மாலை ஏற்றிக்கொண்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று கொண்டிருந்தனர். அதிராம்பட்டினம் அருகே கருங்குளம் பாலத்தை கடந்து சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த சரக்குவேன் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் வேனில் பயணித்த 3 பேரும் காயமடைந்தனர். மேலும் வேனில் இருந்த 200 கிலோ இறால்கள் சாலையில் கொட்டி சிதறியது. பின்னர் காயமடைந்த 3 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் பட்டுக்கோட்டை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments