முத்துப்பேட்டையில் அனைத்து ஜமாஅத் தலைவர்களுக்கு முத்துப்பேட்டை காவல் ஆய்வாளர் சுற்றறிக்கை






முத்துப்பேட்டையில் அனைத்து ஜமாஅத் தலைவர்களுக்கு முத்துப்பேட்டை காவல் ஆய்வாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்கள்

அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாவது

பொருள்:- பள்ளிவாசல் திருமண நிகழ்ச்சிக்கு வரும் இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்து பொதுமக்களுக்கு அச்சுருத்தலை ஏற்படுத்தி வருவது குறித்து கட்டுப்படுத்த வேண்டுவது தொடர்பாக

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை காவல் நிலைய சரகத்தில் உள்ள கீழ்கண்ட பள்ளிவாசல்களில் நடக்கும் திருமணங்களில் கலந்துக்கொள்ளும் உள்ளூர் மற்றும் வெளியூர் இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் தங்களது இருசக்கர வாகனத்தை அதிக வேகத்துடனும் அதிக சத்தத்தை ஏற்படுத்தியும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதுடன் சாலையில் செல்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றார்கள் இதனால் அதிக அளவு விபத்துக்கள் ஏற்பட்டும் வருவதால் நடவடிக்கை எடுக்க வேண்டி பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு வாய்மொழியாக புகார் தெரிவிக்கின்றனர் மேற்படி திருமண நிகழ்ச்சிக்கு வரும் இளைஞர்களுக்கு தக்க அறிவுரை வழங்கி ஊர்வலத்தை கட்டுப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் மீறி செயல்படும் இளைஞர்கள் மீது தக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நகல் - கனம் துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முத்துப்பேட்டை உட்கோட்டம்.

1. ஆசாத் நகர் ஜூம்மா  பள்ளி வாசல்
2. புதுபள்ளி ஜூம்மா பள்ளி வாசல்
3. பெரிய கடை தெரு கொத்துபா பள்ளி ஜூம்மா வாசல்
4. முகைதீன் பள்ளி தெரு முகைதீன் பள்ளி வாசல்
5. பேட்டை ரோடு குட்டியார் பள்ளி ஜூம்மா வாசல்
6. பேட்டை ரோடு அரபு சாகிப் ஜூம்மா பள்ளி வாசல்
7. பேட்டை முகைதீன் பள்ளி ஜூம்மா வாசல்
8. ஜாம்புவானோடை ஷேக் தாவுத் ஒலியுல்லா ஜூம்மா பள்ளி வாசல்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments