திருத்துறைப்பூண்டியில் திருவாரூர் - மன்னார்குடி - முத்துப்பேட்டை சாலைகளை இணைக்கும் 2ம் கட்ட புறவழிச்சாலை பணிக்கு ரூ.11.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
இதுகுறித்து திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மாரிமுத்து M.L.A வெளியிட்டுள்ள அறிக்கையில்
திருத்துறைப்பூண்டியில் திருவாரூர்- மன்னார்குடி -முத்துப்பேட்டை சாலைகளை இணைக்கும் 2ம் கட்ட புறவழிச்சாலை பணிகளை தொடங்கிட வேண்டும் என்ற
கோரிக்கையை ஏற்று 25/06/24 அன்று நடைபெற்ற பேரவை கூட்ட தொடரில் திருத்துறைப்பூண்டியில் 11.60 கி.மீ தொலைவு கொண்ட இரண்டாம் கட்ட புறவழிச்சாலைக்கு நிலம் கைகப்படுத்த ரூ 11.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. மேலும் வேளுர் தீவாம்பாள்புரம், கொத்தமங்கலம், நுணாக்காடு, எழிலூர், வங்கநகர், மற்றும் கள்ளிக்குடி ஆகிய ஏழு கிராமங்களில் புறவழிச்சாலைக்கு தேவையான நிலங்களை உத்தேச திட்டமதிப்பீட்டு அறிக்கையின் படி கையகபடுத்தும் பணிகள் தொடங்கிட உள்ளது.
இந்த இரண்டாம் கட்ட புறவழிச்சாலை நிதி ஒதுக்கீடு அறிவிப்புக்கு தமிழ்நாடு அரசுக்கு தொகுதி மக்களின் சார்பில் நன்றி தெரிவித்து மகிழ்கிறேன்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.