சென்னை சென்ட்ரல் - ஹஜ்ரத் நிஜாமுதீன் "Garib Rath" ரயில் LHB ஆக மாற்றம் - கூடுதல் பெட்டிகள் இனைப்பு -தெற்கு ரயில்வே அறிவிப்பு






சென்னை சென்ட்ரல் -  ஹஜ்ரத் நிஜாமுதீன் "Garib Rath" ரயில் LHB ஆக மாற்றம் - கூடுதல் பெட்டிகள் இனைப்பு -தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது 

சென்னை சென்ட்ரல் - தில்லி இடையே இயக்கப்படும் கரீப் ரத் (ஏழைகள் ரதம்) விரைவு ரயிலில் சனிக்கிழமை (ஜூன் 15) முதல் கூடுதலாக ஒரு பெட்டி இணைக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை சென்ட்ரலில் இருந்து தில்லி ஹஸ்ரத் நிஜாமுதினுக்கு சனிக்கிழமை தோறும், மறுமாா்க்கமாக தில்லியில் இருந்து திங்கள்கிழமை தோறும் கரீப் ரத் விரைவு ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில் 14 ஏசி பெட்டிகள், 2 சரக்கு பெட்டிகளுடன் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், சனிக்கிழமை (ஜூன் 15) முதல் கூடுதலாக ஒரு ஏசி பெட்டி இணைக்கப்படவுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரீப் ரத் எக்ஸ்பிரஸ்

MGR சென்னை சென்ட்ரல் -  ஹஜ்ரத் நிஜாமுதீன் கரீப் ரத்  எக்ஸ்பிரஸ் (Weekly)

கரீப் ரத் என்ற சொல்லுக்கு ஏழையின் வண்டி என்று பொருள். குறைந்த செலவில் பயணிக்கத்தக்க தொடர்வண்டிகளை கரீப் ரத் என்ற பெயரில் இந்திய இரயில்வே இயக்குகிறது. இத்தகைய வண்டிகளில் கட்டணமும் குறைவு. பெட்டிகளில் அதிக இருக்கைகள் இருக்கும். இது ராஜ்தானி வகை வண்டிகளின் வேகத்தில் இயங்குகிறது.கரீப் ரத் (ஏழைகளின் தேர்) ரயில்கள் என்பது வழக்கமான ரயில்களுடன் ஒப்பிடும்போது குறைந்த கட்டணத்தில் குளிரூட்டப்பட்ட ரயில் பயணத்தை வழங்குவதற்காக இந்திய இரயில்வேயால் இயக்கப்படும் ஃபிரில்ஸ் இல்லாத ரயில்களின் தொடர் ஆகும்

வண்டி எண் 12611 சென்னை சென்ட்ரல் - ஹஜ்ரத் நிஜாமுதீன்

சென்னை சென்ட்ரல் - ஹஜ்ரத் நிஜாமுதீன் ஒவ்வொரு வாரமும்
சனி கிழமைகளில் காலையில் 6.00 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு மறுநாள்  ஞாயிறு கிழமைகளில் காலை 10.30 மணிக்கு   ஹஜ்ரத் நிஜாமுதீன் சென்றடையும்.

வண்டி எண் 12612 ஹஜ்ரத் நிஜாமுதீன் - சென்னை சென்ட்ரல்

ஹஜ்ரத் நிஜாமுதீன் - சென்னை சென்ட்ரல் ஒவ்வொரு வாரமும்  திங்கட்கிழமை கிழமைகளில் மாலை 03.35 மணிக்கு ஹஜ்ரத் நிஜாமுதீனில் இருந்து புறப்பட்டு மறுநாள் செவ்வாய்  கிழமைகளில் இரவு 08.55 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்

நிறுத்தங்கள் இரு மார்க்கத்திலும் எங்கே எங்கே நின்று செல்லும் ?

கூடூர் (ஆந்திரா)
ஓங்கோல் (ஆந்திரா)
விஜயாவாடா (ஆந்திரா)
பல்ஹர்சா  (மஹாராஷ்டிரா),
நாக்பூர் (மஹாராஷ்டிரா),
போபால் (மத்திய பிரதேசம்),
வீராங்கனை லெட்சுமி பாய் ஜான்சி
(உத்திர பிரதேசம்),
குவாலியர்  (மத்திய பிரதேசம்),
ஆக்ரா (உத்திர பிரதேசம்),

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments