பாம்பன் மீனவர்கள் வலையில் சிக்கிய ஆள் உயர ‘கடல் விரால்’ மீன் எடை 70 கிலோ




பாம்பனில் மீனவர்கள் வலையில் 70 கிலோ எடை கொண்ட ஆள் உயர கடல் விரால் மீன் சிக்கியது.

ஆள் உயர கடல் விரால்

ராமேசுவரம் அருகே பாம்பன் தெற்குவாடி துறைமுக பகுதியில் இருந்து நேற்று முன்தினம் 80-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 500-க்கும் அதிகமான மீனவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்த மீனவர்கள் அனைவரும் நேற்று காலை சீலா, மாவுலா, திருக்கை, முரள், கிளாத்தி உள்ளிட்ட பலவகையான மீன்களுடன் கரை திரும்பினார்கள். இதில் ஒரு விசைப்படகில் சுமார் 70 கிலோ எடையில் ஆள் உயர கடல் விரால் மீன் சிக்கி இருந்தது. அதுபோல் 30 கிலோ மற்றும் 20 கிலோ எடையில், அதைவிட சிறிய அளவிலான கடல் விரால் மீன்களும் சிக்கி இருந்தன. இதே போல் மீனவர் வலையில், யானை திருக்கை மீனும் சிக்கி இருந்தது.

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பு

இது குறித்து விசைப்படகு மீனவர் பேட்ரிக் கூறும்போது, “கடல் விரால் மீன்கள் மிகவும் ஆழ்கடல் பகுதியில்தான் கிடைக்கும். சிறிய வகை கடல் விரால் மீன்கள் சாதாரணமாக கிடைக்கும். 40 கிலோவுக்கு மேல் பெரிய கடல் விரால் மீன் கிடைப்பது மிகவும் அரிதுதான். தற்போது கடல் விரால் மீன் ஒரு கிலோ ரூ.420-க்கு விலை போகிறது. இந்த வகை மீன்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. சிறிய வகை கடல் விரால் என்றால் விலை அதிகம். பெரிய வகை மீனுக்கு விலை சற்று குறைவுதான்,” என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments