புதுக்கோட்டை-அறந்தாங்கி 4 வழிச்சாலை பணியை அதிகாரிகள் ஆய்வு




 

புதுக்கோட்டை அறந்தாங்கி நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டது. 

இதற்கான பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

கைக்குறிச்சி அருகே சாலை அகலப்படுத்தப்பட்டு விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் 4 வழிச்சாலை பணியை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் செந்தில், கோட்ட பொறியாளர் வேல்ராஜ், உதவி கோட்ட பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி பொறியாளர் தியாகராஜன் ஆகியோர் ஆய்வு செய்தனர். 

அப்போது பணிகளின் தரத்தை பார்வையிட்டனர். மேலும் பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments