மணமேல்குடி ஒன்றியத்தில் பட்டங்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சிறப்பு பள்ளி மேலாண்மை குழு கூட்டம்




மணமேல்குடி ஒன்றியத்தில் பட்டங்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சிறப்பு பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி  ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. 

மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட பட்டங்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் தலைமையில் தொடங்கியது.

இப்பள்ளியின் பள்ளி மேலாண்மை குழு தலைவர் திருமதி பத்மா தேவி அவர்கள்  முன்னிலை வகித்தார்.

இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி ஜெகதீஸ்வரி அனைவரையும் வரவேற்று பேசினார் 
இந்நிகழ்வில் பட்டங்காடு குடியிருப்பில் பள்ளிச் செல்லா குழந்தைகள் இருந்தால் அவர்களை கண்டுபிடித்து பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், அதேபோல் மாற்றுத்திறனாளி குழந்தைகள் அடையாளம் காணப்பட்டால் உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
 முதல் வகுப்பில் 11 மாணவர்கள் சேர்க்கப்பட்டதற்கு அனைத்து பெற்றோர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

மேலும் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து மாணவர்களுக்கு பயன்படும் வகையில் வகுப்பறை செயல்பாடுகளை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிகழ்வின் முடிவில் இப்பள்ளியின் இடைநிலை ஆசிரியர் திரு செபஸ்தியான் அவர்கள் நன்றி கூறினார்.
இந்நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் 18 பேர் கலந்து கொண்டனர்






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments