அறந்தாங்கியில் மோட்டார் சைக்கிள் திருடிய 3 வாலிபர்கள் கைது




அறந்தாங்கியில் மோட்டார் சைக்கிள் திருடிய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் கடந்த 1-ந் தேதி காரைக்குடி சாலையில் அறந்தாங்கியை சேர்ந்த தினேஷ் என்பவர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை.

இதையடுத்து அருகில் உள்ள இ்டங்களில் தேடி பார்த்தும் மோட்டார் சைக்கிள் கிடைக்கவில்லை. இதுகுறித்து தினேஷ் அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரம், இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

3 பேர் கைது

இதையடுத்து தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் இளமாறன், சண்முகம் மற்றும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் அறந்தாங்கி ஸ்ரீராம் நகரை சேர்ந்த சஞ்சய் (வயது 21), களப்பக்காடு பகுதியை சேர்ந்த குணபாலன் (23), அறந்தாங்கி பெரியார் தெருவை சேர்ந்த மணி (21) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து, 3 பேரையும் போலீசார் புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments