பெரியபட்டினத்தில் ஹீப்ரு மொழி கல்வெட்டு




ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் 'பழங்கால கல்வெட்டுகள் அதிகம் காண கிடைக்கும் பகுதியாக உள்ளது. இங்கு தமிழ் மட்டும் அரபு மொழி கல்வெட்டுகள் அடிக்கடி கண்டுபிடிக்கப்படுவது வழக்கம். இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்குள்ள விவசாயி பாலு என்பவரின் தென்னந்தோப்பில் உள்ள துணி துவைக்கும் கல்லில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருப்பதை அங்குள்ள வரலாற்று ஆய்வாளர் ஹாதிம் அலி கண்டறிந்தார். அவர் இது குறித்து ஆராய முற்பட்டபோது அந்த கல்வெட்டில் உள்ள எழுத்துக்கள் அரபு மொழியோ தமிழ் மொழியோ இல்லை என்பது தெரிய வந்தது. பின்னர் அந்த கல்வெட்டு குறித்த படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். அதனைப் பார்த்த துபாயில் பணியாற்றி வரும் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் ஜக்கரியா என்பவர் இந்த கல்வெட்டு குறித்த தகவல்களை பெற்றுக்கொண்டு அவை ஹீப்ரு மொழியை சேர்ந்தது என்பதை தெரிவித்தார். மேலும் அந்த கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துக்கள் சிதைந்து போயிருந்ததால் முழுமையான தகவல்களை பெற முடியவில்லை. அதாவது அங்கு வாழ்ந்த ஒரு யூத பெண்மணியின் கல்லறையில் பொறிக்கப்பட்டு இருந்த கல்வெட்டு என்பது மட்டும் தற்போது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் கடல் அகழ்வாராய்ச்சி துறையின் தலைவர் செல்வகுமார் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இதனை படிமம் எடுத்த பிறகு அந்த கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள விவரங்கள் என்ன என்பதை உறுதிப்படுத்தி கூற முடியும் என்று அவர் தெரிவித்தார். இருப்பினும் இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட ஹீப்ரு மொழிலான பழமையான கல்வெட்டு இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கல்வெட்டு 3 அடி நீளம், 2 அடி அகலம் கொண்டுள்ளது. 1946-ம் ஆண்டு பெரியபட்டினத்தில் தாவீதின் மகள் மரியம் என்பவர் கல்லறையில் இதே போன்ற ஹீப்ரு மொழி எழுதப்பட்ட கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments