பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் நேற்று 2 என்ஜின்களை சேர்த்து இயக்கி சோதனை நடத்தப்பட்டது. இதை ரெயில்வே வாரிய உறுப்பினர் அணில் குமார் கண்டேல்வால் நேரில் ஆய்வு செய்தார்.
ரெயில்வே வாரிய உறுப்பினர் ஆய்வு
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் புதிதாக ரெயில் பாலம் கட்டும் பணி கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. புதிய ரெயில் பால பணிகளை ஆய்வு செய்வதற்காக டெல்லியில் இருந்து நேற்று ரெயில்வே வாரிய உறுப்பினர் அணில்குமார் கண்டேல்வால் ராமேசுவரம் வந்தார். அவர் ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் விரிவாக்க பணிகளையும் ஆய்வு செய்தார்.
இதை தொடர்ந்து அங்கிருந்து கார் மூலமாக புறப்பட்டு பாம்பன் வந்து, ரெயில் பாலம் பணிகளை பார்வையிட்டார். பாலம் கட்டுமானம் தொடங்கியது முதல் தற்போது வரை முடிந்த பணிகளின் படங்கள் அங்கு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றை பார்வையிட்டார்.
2 என்ஜின்களை இயக்கி சோதனை
இதை தொடர்ந்து படகு மூலம் பாலத்தின் மையப்பகுதிக்கு சென்றார். அங்கு கட்டப்பட்டு வரும் தூக்குப்பாலம் பகுதிக்கு சென்ற அவர் தூக்குப்பாலத்தை திறப்பதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள டவர் மற்றும் அதன் மீது பொருத்தப்பட்டுள்ள இரும்பினால் ஆன வீல் சக்கரத்தையும் பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்து மண்டபம் பகுதியில் இருந்து, பாலத்தின் நுழைவுப்பகுதிக்கு சென்று பணிகள் நிறைவு பெற்ற பகுதிகளை பார்வையிட்டார். பணி நிறைவு இடத்தில் 2 என்ஜின்களை சேர்த்து இயக்கி சோதனை நடத்தப்பட்டது. ரெயில் என்ஜின்கள் பாலத்தில் வந்தபோது, அதிர்வுகள், உறுதித்தன்மை குறித்து அங்குள்ள கருவியில் பதிவானது. அதையும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுக்காக திருச்சி பொன்மலையில் இருந்து ேமற்கண்ட 2 என்ஜின்கள் வரவழைக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு என்ஜினும் தலா 110 டன் எடை உள்ள நிலையில் 2 என்ஜின்களையும் சேர்த்து 220 டன் எடையில் பாலத்தில் விடப்பட்டு, 10 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கி இந்த சோதனை நடத்தப்பட்டது. இன்னும் 3 நாட்களுக்கு இந்த சோதனை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
அதிகாரிகள்
இந்த ஆய்வின்போது ரெயில்வே வாரிய நில மற்றும் வசதிகள் பிரிவு நிர்வாக இயக்குனர் பங்கஜ் தியாகி, தெற்கு ெரயில்வே தலைமை முதன்மை பொறியாளர் ஆர்.எஸ்.காஹ்லாட், ரெயில்வே கட்டுமான பிரிவு தலைமை நிர்வாக அதிகாரி அமித் குமார், மதுரை ெரயில்வே கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீ வத்சவா, ரெயில் விகாஸ் நிகாம் நிறுவன இயக்க மேலாளர் ராஜேஷ் பிரசாத், முதன்மை நிர்வாக இயக்குனர் பி.என்.சிங், முதன்மை திட்ட மேலாளர் கமலாகரரெட்டி, மின்சார பிரிவு பொது மேலாளர் ராமநாதன் உள்ளிட்ட அதிகாரிகளும் வந்து இருந்தனர்.
இன்னும் 2 மாதத்தில் ரெயிலை இயக்கி சோதனை
பாம்பன் பாலத்தில் ஆய்வு செய்த ெரயில்வே வாரிய உறுப்பினர் அணில் குமார் கண்டேல்வால் நிருபர்களிடம் கூறியதாவது:- பாம்பன் புதிய ரெயில் பாலம் பணிகள் மிக வேகமாகவே நடைபெற்று வருகின்றன. இன்னும் 2 மாதத்தில் ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது.
அதுபோல் இந்த ஆண்டுக்குள் ராமேசுவரம் ரெயில் நிலைய விரிவாக்க பணிகளை முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த நிதியாண்டுக்குள் பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் ரெயில் போக்குவரத்து தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.