ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா புல்லூர் கிராமம் அருகே ரேஷன் அரிசி கடத்திச் செல்வதாக திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு நிரேஷ்க்கு தகவல் கிடைத்துள்ளது. அவர் உத்தரவிட்டதன் பேரில் திருவாடானை போலீஸ் துணை சரக குற்றப்பிரிவு போலீசார் ரேஷன் அரிசி கடத்திச் சென்ற சரக்கு வாகனத்தை மடக்கிப்பிடித்தனர். அப்போது அந்த வாகனத்தை போலீசார் சோதனையிட்டதில் 3 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து போலீசார் அந்த வாகனத்தின் டிரைவரான காரைக்குடி புதுவயல் கல்லூர் பகுதியை சேர்ந்த சிவசாமி (வயது 50) என்பவரை கைது செய்தனர். அதனைத்தொடர்ந்து குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மற்றும் டிரைவரையும் ராமநாதபுரம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அதனைத் தொடர்ந்து அவர்கள் நடத்திய விசாரணையில் ரேஷன் அரிசி கடத்திச் சென்ற வாகனம் காரைக்குடி புதுவயல் கல்லூர் பாண்டி என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. மேலும் இதுகுறித்து உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.