அறந்தாங்கியில் டிராகன் பழம், முந்திரி சாகுபடிக்கு மானியம் தோட்டக்கலை துறை அதிகாரி தகவல்




டிராகன் பழம் மற்றும் முந்திரி சாகுபடிக்கு மானியம் கிடைப்பதாக தோட்டக்கலை துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

டிராகன் செடிகள்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் டிராகன் பழம் மற்றும் முந்திரி சாகுபடி செய்ய தோட்டக்கலை துறையின் மூலம் மானியம் வழங்கப்படுகிறது. டிராகன் பழம் ஒரு கள்ளி வகை பழப்பயிர், மருத்துவ குணம் கொண்ட இப்பயிர் குறைந்தளவு தண்ணீரில் அதிக லாபம் தரக்கூடியது.

அறந்தாங்கி வட்டார தோட்டக்கலை துறையின் மூலம் டிராகன் சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு, தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் டிராகன் சாகுபடி செய்ய விருப்பம் உள்ள விவசாயிகளுக்கு ஒரு எக்ேடருக்கு ரூ.96 ஆயிரம் மானியத்தில் டிராகன் செடிகள் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளது.

மானியம்

அறந்தாங்கி வட்டாரத்தில் புதிதாக முந்திரி விவசாயம் செய்ய உள்ள விவசாயிகளுக்கு, தேசிய தோட்டக்கலை இயக்கம் முந்திரி பரப்பு விரிவாக்க இனத்தின் மூலம் எக்டேருக்கு ரூ.12 ஆயிரம் மானியத்தில் முந்திரி ஒட்டு செடிகள் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளது. எனவே விருப்பம் உள்ள விவசாயிகள் தோட்டக்கலைத் துறையினை அணுகி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 9578770294, 8940656492 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments