பாண்டிய மன்னர் வரலாறு கூறும் மணமேல்குடி




ஐந்திணை நிலங்களில் கடலும், கடல் சார்ந்த பகுதியும் ∞ நெய்தல் என்று அழைக்கப்படுகிறது. அத்தகைய கடற்க ரையோர பகுதியாக மட்டுமின்றி, சைவ நெறி போற்றிய நாயன்மார் ஒருவரை தந்த பகுதியாக ஒரு ஊர் விளங்கு கிறது. அத்தகைய ஊரை பற்றியே இங்கு காண உள்ளோம். அந்த ஊரின் பெயர் மணமேல்குடி.

மணல் மேல் குடி
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இந்த ஊர் கடற்கரையை யொட்டிய பகுதியாகும். மணமேல்குடியை மணல் மேல் குடி என பிரித்து மணல் மீது தங்கியிருத்தல் என்று பொருள் கொள்ளலாம். முற்காலத்தில் இப்பகுதி தீவு போன்று விளங்கிய நிலையில், மணல் மீது வசிப்பிடங்கள் அமைந்திருந்தபடியால் அப்பெயர் ஏற்பட்டி ருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இத்தகைய மணமேல்குடி பல்வேறு சிறப்பம்சங்களை கொண் டுள்ளது. ஒட்டக்கூத்தர் பிறந்த மண்ணும் இதுதான் என்று கூறப்ப டுகிறது. மேலும் 63 நாயன்மார்களில் ஒருவரான குலச்சிறையார் பிறந்தது இவ்வூரில்தான். அக்காலத்தில் இப்பகுதி பாண்டிய மன்னர்களின் அரசாட்சிக்கு உட்பட்டதாக விளங்கியது. சிறந்த சிவ பக்தரான குலச்சிறையார், பாண்டிய மன்னரான கூன் பாண் டியனிடம் அமைச்சராக பணிபுரிந்தார்.

அவதிப்பட்ட மன்னர்
அப்போது பாண்டிய நாட்டில் சமண சமயம் முக்கியத்துவம் பெற்றிருந்தது. மேலும் கூன் விழுந்த நிலையில் மன்னர் அவதிப் பட்டார். இதனால் அவரை குணப்படுத்த அரசியான மங் கையர்க்கரசி பல்வேறு முயற்சிகளை மேற்கொண் டார். அவை பயனளிக்காமல் போகவே, வேதா ரண்யத்தில் இருந்து சமயக்குரவர்கள் நால்வ ளில் ஒருவரான சம்பந்தரை மதுரைக்கு அழைத்து வந்து, மன்னரின் பிணி தீர்க்க குலச்சிறையாரை வேண்டினார். அதன்படி குலச்சிறையார் சென்று சம் பந்தரை மதுரைக்கு அழைத்து வந்தார். அங்கு அவருக்கு, சமணர்கள் பல்வேறு சவால்களை அளித்தனர். அவற்றை எதிர் கொண்ட சம்பந்தர், பின்னர் மன்னரை குணப்படுத்தினார். இதை யடுத்து மன்னர் சைவ சமயத்தை மேலோங்க செய்ய பல்வேறு பணிகளை மேற்கொண்டார். இதனால் கூன் பாண்டியன் என்ற பெயர் மாறி, நின்ற சீர் நெடுமாறன் என்று வழங்கப்பட்டார்.

மண்ணில் புதைந்திருந்த லிங்கம்
இத்தகைய நிலையில் குலச்சிறை
நாயனார்
பூஜை செய்ய சிவலிங்கம் ஒன்றை நிறுவ நினைத்தார். அதற்கேற்ப
வீட்டருகே கிடந்த பெரிய கல்லை பார்த்து, சிற்பியிடம் அக்கல்லை
சிவலிங்கமாக வடிவமைக்கச் சொல்ல வேண்டும் என்று
நினைத்தபடி தூங்கச் சென்றார். மறுநாள் காலை வாசலுக்கு வந்து
பார்த்தபோது அந்தக் கல் சிவலிங்கமாக மாறி இருந்தது. இதனால்
ஆச்சரியமும்,ஆனந்தமும் பெருக, அவர் அந்த சிவலிங்கத்திற்கு ஜெகதீஸ்வரர் என்று பெயரிட்டு வழிபட்டு வந்துள் ளார்.
காலப்போக்கில் அந்த சிவலிங்கமும், அம் பாள் சிலையும் குலச்சிறையார் வாழ்ந்த பகு தியில் உள்ள வயல்வெளியில் மண்ணில் புதைந்து விட்டன. இவ்வாறு அவை புதைந் திருப்பது 1942-ம் ஆண்டில் தெரியவந்தது. 1 இதையடுத்து அப்பகுதி மக்கள் அப்பகுதி யில் முட்செடிகளை அகற்றி, மண்ணைத் தோண்டி அச்சிலைகளை வெளியே எடுத்தனர். பின்னர் சிறு கொட்டகைக்குள் அவற்றை வைத்து, மக்கள் வழிபட்டனர். 1944- ம் ஆண்டு கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லையான ஆறு
இக்கோவிலில் லிங்க வடிவில் காட்சி தரும் இறைவனை ஜெக தீஸ்வரர் என்றும், அம்பாளை ஜெகத்ரட்சகி என்றும் அழைக் கின்றனர். -. இக்கோவிலின் மகாமண்டபத்தில் சம்பந்தர், குலச்சிறை நாயனார், மங்கையர்க்கரசி, நின்ற சீர் நெடுமாறன் ஆகியோருக் கான சிலைகள் தனி சன்னதியில் உள்ளது. இக்கோவிலில் ஆவணி மாதம் குலச்சிறை நாயனார் விழா நடத்தப்படுகிறது. இந்த கோவிலுக்கு வடக்கே சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் வெள்ளாறு ஓடுகிறது.இதுசோழ மற்றும் பாண்டிய நாடுகளின் எல் லையாக இருந்ததாக கூறப்படு கிறது. இப்பகுதியில் ஏற்கனவே பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோவில் இருந்ததாகவும், இங்கு திருஞானசம்பந்தர் வழி பட்டதாகவும் கூறப்படுகிறது. மணமேல்குடியில் பவுர்ணமி விழா சித்திரை மாதம் 15 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதே போல் இப்பகுதி ராமர் வந்து சென்ற பகுதியாகவும் கருதப்படு கிறது.அதற்கேற்ப மணமேல்குடி அருகே உள்ள இடையன்வயலில் ராமர் பாதம் உள்ளது. மேலும் மணமேல்குடி நகரில் பள்ளிவா சல், வடக்கூர் அம்மன் கோவில், அந்தோணியார்புரம், விச்சூர்பகுதிகளில் உள்ள தேவாலயங்கள், சிங்கவனம் அருகே உள்ள பட்டாபிராமர் கோவில், பொன்னகரத்தில் ஆதிகேசவ பெருமாள் கோவில் போன்ற பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலங்களும் உள்ளன.
கோடியக்கரை
மணமேல்குடி அருகே கோடியக்கரை அமைந்துள்ளது. வங்காள விரிகுடா கடற்கரை பகுதியான இங்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருவார்கள். புதுக்கோட்டை மாவட்டம் மட்டு மின்றி அருகில் உள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இங்கு வந்துமகிழ்ச்சியாக பொழுதை கழிப்பார்கள். குறிப்பாக சென்னை- கன்னியாகுமரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையோரம் இந்த பகுதி அமைந்திருப்பதால், இந்த வழியாக செல்லும் சுற்றுலா பய ணிகள் பலர் கோடியக்கரைக்கு வந்து கடற்கரையில் அமர்ந்து இயற்கை எழிலை ரசித்தும், கடலில் குளித்தும் மகிழ்ச்சியில் திளைப்பார்கள்.
இதேபோல் மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுக்க ஆடி, தை அமாவாசை நாட்களில் இப்பகுதிக்கு பொதுமக்கள் அதிகம் வருவது உண்டு. இதனால் இந்த கடற்கரை பகுதி பரபரப்பாகவே காணப்படும். விடுமுறை தினங்கள், பண்டிகை காலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும்.
பெரிய சந்தைகள்
இவ்வாறு பல்வேறு சிறப்புகள் கொண்ட மண மேல் குடி ஊராட்சி ஒன்றியமாகும். இப்ப குதி அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கும், ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கும் உட்பட்டதாக விளங்குகிறது. இப்பகுதியின் முக்கிய வாழ்வா தாரமாக மீன்பிடி தொழில் உள் ளது. இப்பகுதியை சேர்ந்தவர் கள் பலர் நாட்டுப்படகுகளில் சென்று மீன்பிடித்து வருகின்ற னர். மேலும் விசைப்படகுகளில் மீன்பிடிக்க செல்பவர்களும் உள்ளனர்.
மேலும் மணமேல்குடியிலும், அருகே உள்ள கட்டுமாவடியி லும் பெரியமீன் சந்தைஉள்ளது. இங்கு சுமார் 15-க்கும் மேற்பட்ட மீன் ஏலக்கடைகள், இறால் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இங்கு கட்டுமாவடி, மணமேல்குடி, பொன்னகரம், புதுக்குடி சேதுபாவாசத்திரம், மந்திரிப்பட்டினம் போன்ற பகுதிகளில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் பிடிக்கும் மீன்களும், ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினம், சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் போன்ற பகுதிகளில் உள்ள விசைப்படகு மீனவர்கள் பிடிக்கும் மீன்களும் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

உயிருடன் கிடைக்கும் மீன்கள்
அதுமட்டுமின்றி ராமநாதபுரம், பாம்பன், ராமேஸ்வரம், தூத்துக் குடி, காரைக்கால், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் இருந்து சரக்கு வாகனங்கள் மூலம் தினமும் மீன்கள் விற்பனைக்கு வருகின்றன. இந்த மீன்களை வாங்குவதற்காக மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, பட்டுக்கோட்டை போன்ற பகுதிகளில் இருந்து வியாபாரிகள் சரக்கு வாகனங்களில் தினமும் வந்து செல்கின்றனர்.
மேலும் உள்ளூர் வியாபாரிகளும் வந்து மீன்களை வாங்கிச் செல்வார்கள். இந்த மீன் சந்தைகளில் பல்வேறு வகையான மீன் கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. அவற்றை பொதுமக் களும், வியாபாரிகளும் போட்டி போட்டு வாங்கிச்செல்கின்றனர். மேலும் சில வகை மீன்கள் இங்கு உயிருடனேயே கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காட்சி பொருளான கோபுரம்
கோடியக்கரை கடற்கரையோர பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு கடந்த 2013-ம் ஆண்டு ரூ.13 லட்சம் செலவில் சுற்றுலா வரவேற்பு மையமும், கழிவறை மற்றும் உடை மாற்றும் அறையும், காட்சி கோபுரம் ரூ.15 லட்சம் செலவிலும் கட்டப்பட்டது. ஆனால் இவை பயன் பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் காட்சிப்பொருளாகவே உள் ளன. சிறுவர் பூங்காவும் அமைக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. காட்சி கோபுரத்தில் சுற்றுலா பயணிகள் ஏறி கடல் மற்றும் கடற்கரை பகுதியை பார்க்கும் வகையில் கட்டப்பட் டுள்ளது. ஆனால் அந்த கோபுரம் கட்டப்பட்டதற்கான நோக்கம் நிறைவேறாத நிலையிலேயே உள்ளது. இந்த பகுதியில் அடிப் படை வசதிகளை மேம்படுத்தி கோடியக்கரை கடற்கரை பகு தியை சுற்றுலா தலமாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments