மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நாளை நடைபெறும் இடங்கள் அறிவிப்பு




புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், எஸ்.குளவாய்ப்பட்டி ஊராட்சி, கே.கே. திருமண மண்டபத்தில் இசுகுபட்டி, எஸ்.குளவாய்ப்பட்டி, கத்தகுறிச்சி, களங்குடி, கைக்குறிச்சி, சென்டாகுடி, பழையூர், பூவரசக்குடி, மணியம்பலம், வல்லத்திராக்கோட்டை, வாண்டாக்கோட்டை ஆகிய ஊராட்சிகளுக்கு நடைபெற உள்ளது. இதேபோல மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம், கோட்டைப்பட்டினம் ஊராட்சி, கோட்டைப்பட்டினம் கிராம ஊராட்சி அலுவலகத்தில், கரகத்திகோட்டை, வெட்டிவயல், மஞ்சக்குடி, கோட்டைப்பட்டினம் ஆகிய ஊராட்சிகளுக்கும், குன்றாண்டார்கோவில் ஊராட்சி ஒன்றியம், அண்டக்குளம் ஊராட்சி, நூர் மண்டபத்தில், அண்டக்குளம், பெரியதம்பியுடையான்பட்டி, கிள்ளனூர், முட்டம்பட்டி, வைத்தூர், வத்தனாக்குறிச்சி, செனையக்குடி, வீரக்குடி, வாழமங்களம், தேனான்குடி ஆகிய ஊராட்சிகளுக்கும் நடைபெற உள்ளது. மேற்கண்ட முகாம்களில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments