பாம்பன் புதிய ரெயில் பால பணி செப்டம்பரில் முடியும் என தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார்.
4-வது வழித்தடம்
சென்னையில் தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தின் முக்கிய ரெயில் நிலையங்களாக உள்ள சென்னை எழும்பூர், சென்டிரல், கன்னியாகுமரி, தாம்பரம், காட்பாடி, ராமேசுவரம், நெல்லை மற்றும் கும்பகோணம் ஆகிய ரெயில் நிலையங்கள் முழுவதுமாக மறுசீரமைக்கப்பட்டு வருகிறது.
இந்த ரெயில் நிலையங்களை மேம்படுத்த ரூ.150 கோடி முதல் ரூ.700 கோடி வரை நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக எழும்பூர் ரெயில் நிலையத்தை மேம்படுத்த ரூ.700 கோடிக்கு மேல் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த மேம்பாட்டு பணிகள் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. சென்னை எழும்பூர் - கடற்கரை வரையிலான 4-வது வழித்தடப் பணி செப்டம்பர் மாதம் முடிவடையும்.
பாம்பன் பாலம்
ராமேசுவரத்தில் புதிதாக அமைக்கப்படும் பாம்பன் பால பணிகள் செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அக்டோபர் முதல் ராமேசுவரம் - மண்டபம் இடையே ரெயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது தமிழ்நாட்டில் சுமார் 40 ரெயில்வே மேம்பால திட்டப்பணிகளில் ரெயில்வே துறை தனது பணிகளை முடித்துள்ளது. நிலம் கையகப்படுத்துவதில் ஏற்படும் தாமதத்தால் மாநில அரசின் பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது.
பெரம்பூரில் ரெயில் முனையம்
சென்னையில் ஏற்கனவே எழும்பூர், சென்டிரல், தாம்பரம் என 3 ரெயில் முனையங்கள் உள்ளன. 4-வது புதிய ரெயில் முனையம் வில்லிவாக்கத்தில் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், போதிய இடவசதி இல்லாததால் பெரம்பூரில் 4-வது ரெயில் முனையம் அமைக்கப்படவுள்ளது. ரெயில்வேக்கு சொந்தமான இடங்கள் இருப்பதால் நிலம் எடுப்பதில் தாமதம் ஏற்படாது. பொதுமக்கள் வந்து செல்லும் வகையில் நகரின் மையத்தில் அமைந்துள்ளதால் பெரம்பூரில் புதிய முனையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்கான திட்டமிடல், வரைபடம் தயாரித்தல், நில அளவை உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கிளாம்பாக்கம்
இந்த பணிகள் ஒரு மாதத்தில் முடிந்து திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். தற்போது தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி போக தேவையான நிதியை அவ்வப்போது கேட்டு பெறுவோம். கிளாம்பாக்கம் புதிய ரெயில் நிலைய பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிவடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.