புதுக்கோட்டை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையோரம் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
பசுமைமயமாக்கல்
தமிழகத்தில் தட்பவெட்ப நிலை மாற்றம், எதிர்கால நலன் கருதியும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தை பசுமைமயமாக்கல் திட்டத்தில் லட்சக்கணக்கான மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் பெருமளவு மரக்கன்றுகள் நல்ல முறையில் தயாராகி விட்டன. அதனை ஆங்காங்கே வனச்சரக அலுவலக வளாகத்தில் நர்சரி பண்ணை அமைத்து பராமரித்து வருகின்றனர்.
மண் தோண்டும் பணி
இந்த நிலையில் புதுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையோரம் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நட அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக சாலையோரம் மண் தோண்டும் பணி தற்போது தொடங்கியுள்ளது. பொக்லைன் மூலம் குறிப்பிட்ட இடைவெளியில் மண் தோண்டப்பட்டு வருகிறது.
சாலையின் இருபுறங்களும் இந்த மரக்கன்றுகள் நடப்பட உள்ளது. அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே இருந்து ஆதனக்கோட்டை வரை தற்போது பணிகள் மும்முரமாக நடைபெறுகிறது. விரைவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் நாவல், புங்கை, வேம்பு உள்ளிட்ட மரக்கன்றுகள், நிழல் தரக்கூடிய பசுமை மரங்களின் கன்றுகளும் நடப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.