ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் கார்கில் போர் வெற்றி தின கொண்டாட்டம்




ஆவுடையார்கோவில்     அரசு மேல்நிலைப்பள்ளியில் கார்கில் போரில் வெற்றி பெற்று 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு கார்கில் போர் வெற்றி தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வன் தலைமை தாங்கி கார்கில் போர் நடைபெற்ற விதத்தையும், வெற்றி பெற்ற வரலாற்றையும் எடுத்து கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். கார்கில் போரில் வீரமரணம் அடைந்த திருச்சி சரவணன் உள்ளிட்ட அனைத்து ராணுவ வீரர்கள் வீரதீர செயல்கள் நினைவு கூறப்பட்டது. மேலும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரின் நலனுக்கான கொடி நாள் நிதி உண்டியல் மாவட்டக்கல்வி அலுவலகத்தில் இருந்து பெறப்பட்டது. மாணவர்கள் ஆர்வமுடன் நிதி பங்களிப்பு செய்து உடனடியாக கொடிநாள் உண்டியலை நிரப்பிவிட்டனர். இதில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments