ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் - மருத்துவ சேவை அணி நடத்திய 22வது மாபெரும் இரத்ததான முகாம்!



சவூதி அரேபியா நாட்டில் 78-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ரியாத் மத்திய மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (IWF) - மருத்துவ சேவை அணி மற்றும் கிங் சவூத் இரத்த வங்கி இணைந்து நடத்திய 22-வது மாபெரும் இரத்ததான முகாம் 23/08/2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை சுமைசி இரத்த வங்கியில் நடைபெற்றது.

இரத்ததான முகாமிற்கான அறிவிப்பு செய்தவுடன் அயராத உழைப்பாலும், தொடர் அழைப்பு பணியாலும் இறைவனின் கிருபையாலும் ரியாத்தின் அனைத்து பகுதிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட குருதிக் கொடையாளர்கள் கலந்து கொண்டு தங்களுடைய இரத்தத்தை தானமாக வழங்கினர் . மேலும் நேரமின்மை காரணமாக, இன்னும் பல சகோதரர்கள் இரத்ததானம் செய்ய முடியாமல் வருத்தத்துடன் திரும்பி சென்றனர்.

குறுதி வழங்கிய அனைவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் பழங்களுடன் பரிசு பை வழங்கப்பட்டது.


முகாம் வெற்றிகரமாக நடைபெற்றதற்காக களப்பணியாற்றிய சகோதரர்களுக்கும், காலை & மதிய உணவு ஏற்பாடு செய்து தந்த சகோதரர்களுக்கும், வாகன ரீதியாக உதவி செய்த சகோதரர்களுக்கும், ஊடக ரீதியாக உதவிய சகோதரர்களுக்கும், மருத்துவ ஊழியர்களுக்கும், இரத்த வங்கி ஒருங்கிணைப்பாளர்களுக்கும், சுமைசி மருத்துவமனை நிர்வாகிகளுக்கும், தண்ணீர், தேநீர், குளிர்பானம் மற்றும் பழங்கள் போன்றவைகளை ஏற்பாடு செய்து தந்த சகோதரர்களுக்கும், இந்த முகாம் சிறக்க எல்லா வகையிலும் உதவிய அனைத்து சகோதரர்களுக்கும், மதிய உணவு வழங்கிய தம்பிஸ் உணவகத்திற்கும், மண்டல & கிளை நிர்வாகிகளுக்கும், செயற்குழு & பொதுகுழு உறுப்பினர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

ரியாத் மத்திய மண்டல மருத்துவ சேவை அணி சார்பாக நடைபெற்ற இந்த முகாமிற்கு அனுமதி உள்ளிட்ட உழைப்புகளை மேற்கொண்ட சமூக நலத்துறை நிர்வாகிகளுக்கும் பம்பரம் போல் செயலாற்றிய மருத்துவ சேவை அணி பொறுப்பாளர்கள் மற்றும் மண்டல நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள்.

உங்கள் அனைவரது உழைப்பையும் பங்களிப்பையும் எல்லாம் வல்ல அந்த ஏக இறைவன் அங்கீகரித்து நன்மைகளை வழங்கி அருள் புரிவானாக.

என்றும் சமுதாய பணியில் கடல் கடந்து
இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் ( IWF )
மத்திய மண்டலம்
ரியாத் - சவூதி அரேபியா

தொகுப்பு: திருச்சி மீடியா ரஹ்மத்துல்லாஹ்




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments