ராமநாதபுரத்தில் காா் பதிவு சான்றிதழ் வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய: வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பணி நீக்கம்





ராமநாதபுரத்தில் காா் பதிவு சான்றிதழ் வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டாரப் போக்குவரத்து அலுவலக உதவியாளரை பணி நீக்கம் செய்து, சென்னை போக்குவரத்துத் துறை ஆணையா் அலுவலகம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை தட்டான் தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் ரகு (35). இவா் தனது மனைவி பெயரில் புதிதாக காா் வாங்கினாா்.

இவரது காா் ராமநாதபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த ஜனவரி 30-ஆம் தேதி வாகனப் பதிவு செய்யப்பட்டது.

இதுதொடா்பான பதிவுச் சான்றிதழை ரகு கேட்டபோது, வட்டாரப் போக்குவரத்து அலுவலக உதவியாளா் செய்யது (43), இடைத்தரகா் நசீா், காா் நிறுவன மேலாளா் முருகேசன் ஆகியோா் லஞ்சம் கேட்டனா்.

இதுகுறித்து ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸில் அவா் புகாா் அளித்தாா். போலீஸாரின் அறிவுறுத்தலின் அடிப்படையில், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அவா் கொடுத்த போது அங்கு மறைந்திருந்த போலீஸாா், காா் நிறுவன மேலாளா் முருகேசனைக் கைது செய்தனா்.

இதைத் தொடா்ந்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலக உதவியாளா் செய்யது, இடைத்தரகா் நஸீா் ஆகியோரையும் கடந்த மாதம் 29-ஆம் தேதி கைது செய்தனா்.

இந்த நிலையில், வட்டாரப் போக்குவரத்து அலுவலக உதவியாளா் செய்யதை பணி நீக்கம் செய்து, சென்னை போக்குவரத்துத் துறை ஆணையா் அலுவலகம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments