முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி: இணையதளத்தில் முன்பதிவு செய்ய 2-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு




முதல் அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிக்கு இணையதளத்தில் முன்பதிவு செய்ய 2-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு போட்டிகள்

முதல் அமைச்சா் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த ஆண்டு முதல் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டில் நடத்தப்பட இருக்கும் போட்டிகளில் வெவ் வேறு புதிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், மாற்றுத்திறனாளிகள் பொது மக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 27 விளையாட்டுகள் 53 வகைகளில் நடைபெறுகிறது.

மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான போட்டிகள் வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தப்படுகிறது. 

இப்போட்டிகளில் பங்கேற்க இணையதளம் மூலம் முன்பதிவு கடந்த 5-ந் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பரிசுகள்

இப்போட்டிகளில் மாநில அளவில் தனி நபர் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், 2-ம் பரிசாக ரூ.75 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். குழு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75 ஆயிரமும், 2-ம் பரிசாக தலா ரூ.50 ஆயிரமும், 3-ம் பரிசாக தலா ரூ.25 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

இந்த ஆண்டு தனிநபர் மற்றும் குழு போட்டிகளில் 4-வது இடம் பிடிப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மூன்றாம் பரிசுக்கு இணையாக பரிசு வழங்கப்படுகிறது. போட்டிகளில் வழங்கப்படும் சான்றுகள் மூலம் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சலுகைகளும் பெற இயலும்.

2-ந் தேதி வரை நீட்டிப்பு

தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 12 வயது முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணவர்களும், 17 வயது முதல் 25 வயது வரை கல்லூரி மாணவர்களும், 15 வயது முதல் 35 வயது வரை பொதுபிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறுனாளிகளுக்கும் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்திட கடைசி நாள் வருகிற 2-ந் தேதி வரை கால அவகாசம் நீ்ட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே விளையாட்டில் ஆர்வம் உள்ள அனைவரும் தவறாமல் https://sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரஙகத்தில் உள்ள விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட விளையாட்டு அரங்க அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments