புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் லிப்ட்டில் மாற்றுத்திறனாளிகள் செல்வதற்காக சாய்வு தளம் அமைப்பு




புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் அம்ருத் திட்டத்தில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ரெயில் நிலையத்தில் முதலாவது நடைமேடையில் இருந்து 2வது நடைமேடை செல்வதற்கு நடைபாதை மேம்பாலத்தின் அருகே புதிதாக 2 லிப்ட்டுகள் அமைக்கப்படுகிறது. இதில் பெருமளவு பணிகள் முடிந்து விட்டன. இந்த லிப்ட்டில் மாற்றுத்திறனாளிகள் செல்லும் வகையில் சாய்வு தளம் அமைக்கப்படுகிறது. 

இதன் மூலம் சக்கர நாற்காலியில் சென்று லிப்ட்டை பயன்படுத்த முடியும். இதே போல் 2-வது நடைமேடை லிப்ட்டிற்கான பாதையில் சாய்வு தளம் அமைக்கப்படுகிறது. அம்ருத் திட்டத்தில் வளர்ச்சி பணிகள் விரைவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments