மீமிசலில் 3 சாமி சிலைகள் கிடந்ததால் பரபரப்பு





மீமிசலில் 3 சாமி சிலைகள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சாமி சிலைகள்

புதுக்கோட்டை மாவட்டம் 
ஆவுடையார் கோவில் தாலுகாவுக்குட்பட்ட நாட்டனி புரசக்குடி வருவாய்க்குட்பட்ட உப்பளம் அருகே மீமிசலில் சிறிய பள்ளத்தில் நேற்று 3 சாமி சிலைகள் கிடந்தன. 

ஒரு சிலையில் ஊதா நிற பட்டு ஆடையால் சுற்றியவாறும், மற்ற 2 சிலைகளும் வெறுமென கிடந்தது.இது குறித்து அப்பகுதி மக்கள் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

இதையடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று அந்த 3 சாமி சிலைகளையும் கைப்பற்றினர்.

விசாரணை

கற்சிலைகளான அந்த சாமி சிலைகளில் 2 சிலைகள் கருப்புசாமியாகவும், ஒரு சிலை அம்மனாகவும் இருந்தது. அந்த சிலை எப்படி இங்கு வந்தது?, அதனை யாரேனும் கொண்டு வந்து வீசிச்சென்றனரா?, அவை எந்த கோவிலில் இருந்த சிலைகள்?, சிலைகளை கடத்தி வந்து வீசிச்சென்றனரா? என பல்வேறு கோணங்களில் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் கைப்பற்றப்பட்ட சிலைகளை வருவாய்த்துறையினர் ஆவுடையார் கோவில் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

மீமிசலில் கேட்பாரற்று கிடந்த சாமி சிலைகளால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments